[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 04:14.46 PM GMT ]
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக யாழ். ஊடகவிலாளர்களுக்கும் யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் வாராந்தம் சந்திப்பு இடம்பெறுவதும் முக்கிய விடயங்கள் சம்பந்தமான செய்திகள் பொலிசாரினால் ஊடகவிலாளர்களுக்கு வழங்கப்படுவது வழமை.
இந்தநிலையில் கடந்த மாதம் முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பை தவிர்த்துக் கொண்டதுடன், யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி வந்தார்.
எனினும் அவரும் கடந்த வாரங்களில் ஊடகவியலாளர்களது கேள்விகள் சிலவற்றிற்கு பதிலளிக்க முடியாது கலந்துரையாடல்களை பாதியில் முடித்துக் கொண்டு சென்றிருந்தார்.
அதேபோலவே இந்த வாரத்திற்கான சந்திப்பு இன்று பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.மகிந்த எக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
வழமை போன்று இல்லாது இன்று ஊடகவியலாளாகளிடம் ஊர் பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டு விட்டு வழமையான தகவல்கள் வழங்காது கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர்.
இதனால ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தினால் தெரிவுக்குழுவிற்கு ஆதரவளிக்கத் தயார்!- ரணில்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 02:17.10 AM GMT ]
17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தினால் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஆதரவளிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் 17 திருத்தச் சட்டத்தின் சரத்துகள் மீள அமுல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு சட்டத் திருத்தம் அமுல்படு;த்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றாலும் பங்கேற்காவிட்டாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்போம்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வைத்த யோசனைகளுக்கு அரசாங்கம் காத்திரமான பதில் எதனையும் இதுவரையில் முன்வைக்கவில்லை என ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten