தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

இரத்தம் தோய்ந்த இலங்கையின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு! [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 12:31.05 PM GMT ]


2014ம் ஆண்டுக்கான பிரென்சு அழகுராணி போட்டியின் அனுசரணை நாடாக சிறிலங்கா இணைந்துள்ள நிலையில் இதற்கு எதிரான பிரச்சாரங்களும், கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியுள்ளன.
வெளிநாட்டு உல்லாசிகளை கவர்ந்திழுக்கும் பொருட்டு சிறிலங்காவின் உல்லாசத்துறை மற்றும் சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகியன இப்போட்டிக்கு அனுசரனை வழங்கியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அழகுராணிப் போட்டியின் தேர்வு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இதன் முன்நிகழ்வாக பங்குகொள்ளும் பெண்கள் சிறிலங்காவுக்கு சென்று அணிவகுப்பினை செய்யவுள்ளனர்.
இந்நிலையிலேயே இதற்கு எதிரான பிரச்சாரங்களும் ,கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியுள்ளன.
பிரான்சின் வடபுலத்தில் இயங்கி வரும் Solidarté Tamileelam எனும் அமைப்பின் முன்னெடுப்பில் பல்வேறு பிரென்சு பெண்கள் அமைப்புகள் மற்றும் பிரென்சு மனித உரிமை அமைப்புக்களின் கூட்டிணைவில் இதற்கு எதிரான உள்ளக மற்றும் வெளியக பிரச்சாரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சின் வட பிராந்திய பிரதிநிதி வள்ளுவன் பாக்கியமுத்து முன்னெடுத்து வருகின்றார்.
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவினை தனிமைப்படுத்தும் நோக்கமாக நா.தமிழீழ அரசாங்கத்தின் SAY NO TO SRI LANKA முன்னெடுப்பு பணியகமும் இதில் இணைத்துள்ளது.
இதேவளை Amnesty அமைப்பின் பிரான்சு கிளையின் மியான்மார் விவகாரங்களுக்கான அதிகாரி Mireille Boisson அவர்கள் பிரென்சு அழகுராணிப் போட்டிக்கான சிறிலங்காவுக்கான பயணம் பிழையான தேர்வு என வர்ணித்திருப்பதோடு மனித உரிமைகளை விழுக்கின்ற நாட்டுக்கு பெண்கள் செல்வது பொருத்தமல்ல எனவும் கருத்துரைத்துள்ளார்.
இதேவேளை பிரான்சின் முன்னாள் அழகுராணி Sylvie Tellie அவர்கள் சிறிலங்காவின் தேர்வு இவ்வாண்டு போட்டிக்கு கடும் சிக்கல்களை கொடுக்கப்போகின்றத எனத் தெரிவித்துள்ளார்.
1 000 000 உயிர்களை பலிகொண்ட 27 ஆண்டுகால ஆயுதப் போரில் ஏற்பட்ட இரத்தம் படிந்த தனது முகத்தினை சிpறிலங்கா இதன் ஊடாக மறைக்கின்றதென பிரான்சின் Marie-Anne Daye   ஊடகவியலாளர் அவர்கள் rue89.ஊடகத்தில் கட்டுரையொன்றினை வரைந்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten