[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 01:29.00 PM GMT ]
கிழக்கு மாகாணத்தின் தலைநகர் என வர்ணிக்கப்படுகின்ற திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபர் முண்னாள் இராணுவ கட்டளைத் தளபதியாகும்.
கச்சேரியில் இருக்கின்ற மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா அவர்களின் எந்தவித கருத்துக்களும் அரசாங்க அதிபரினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மாவட்டத்தின் அனைத்து முடிவுகளையும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்க அதிபருமாக கடமை புரிந்து கொண்டிருப்பவர்தான் முடிவெடுத்து செயற்பட்டுக் கொண்டு இருப்பதனால் மாவட்ட மக்களுக்கு பெரும் அவதியாய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுபோல கிழக்கு மாகாணத்திற்குரிய பிரதம செயலாளராக கடமை புரிந்த தமிழர் ஒருவரை நீக்கிவிட்டு தற்போது டி.எம்.சரத்.அபய குணவர்த்தன என்பவர் நியமிக்கபபட்டுள்ளார். அது போன்று கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக என்.எ.ஏ.புஷ்பகுமார நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைவிட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து சிங்களவர் ஒருவர்தான் பதவி வகித்து வருகின்றார். இதானல் அம்மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களும் ஏனைய முஸ்லிம் மக்களும் தமது தேவைகளையும் சேவைகளையும் பெறுவதில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவையனைத்திற்கும் மேலாக கிழக்கு மாகாண ஆளுனர் றியல் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம அவர்கள் முன்னாள் இராணுவத்தளபதி தற்போது கிழக்கின் நிர்வாகம் அனைத்தினையும் தம்வசம்படுத்தி வைத்துள்ளார்.
எந்தவித நியமனங்களோ அல்லது செயற்பாடுகளோ கிழக்கு ஆளுனரின் அனுமதியின்றி, கிழக்கு மாகாணசபை அமைச்சர்களோ அதிகாரிகளோ முன்னெடுக்க இடம் கிடையாது அப்படி ஏதாவது இடம்பெற்றால் அத்திட்டம் தடுக்கப்படும் என்பது நியதியாகி விட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வானிலை உதவி அதிகாரி ஒருவர் சிங்களவராகவும் தேர்தல் கடமை அதிகாரி சிங்களவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட கிழக்கிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளினதும், கம்பனிகளினதும் பிரதம முகாமையாளர்கள் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவையனைத்தினையும் பார்க்கும்போது கிழக்கின் நிர்வாகங்களை மெல்ல மெல்ல சிங்கள மயமாக்கிக் கொண்டு வருவதானது பெரும் கவலையையும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எங்கள் வாழ்வாதாரத்துக்கு தமிழக மீனவர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்: இலங்கை தமிழ் மீனவர்கள் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 11:51.34 AM GMT ]
இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை கடந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
சமீபத்தில் கூட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு நேற்று முன்தினம் தான் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர் லிங்கராஜன் கூறியதாவது:-
கடலில் சில மீட்டர் தூரத்தில் எங்கள் சகோதரர்களாகிய தமிழக மீனவர்களிடம் மோத வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. சிறு வயதில் இருந்தே கடலில் மீன்பிடித்து பழகி விட்டோம். 30 வருட காலப் போரினால் இலங்கையில் உள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சில நேரங்களில் வந்து விடுகின்றனர். நாங்கள் அவர்களை சிக்னல் கொடுத்து வெளியேற சொன்னாலும் அவர்கள் வெளியேறுவதில்லை. ஆனால் அவர்கள் எங்கள் படகுகளை நெருங்கி விடுகின்றனர். நாங்கள் அவர்களிடம் பேசினாலும், அவர்கள் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. இந்த பிரச்சினையால் எங்கள் மீன்பிடி வலைகள் சேதமடைகின்றன.
இதனால் ஒரு நாளைக்கு ரூ.1000 (இலங்கை நாணயம்) செலவிட வேண்டியது உள்ளது. அதே நேரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் வலைகளை சீரமைக்க ஒரு வாரத்திற்கு மேலாகிறது.
மற்றொரு இலங்கை தமிழ் மீனவர் கூறுகையில்,
அதிகாலை நேரத்தில் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது இந்திய மீனவர்கள் பெரிய வலைகளை பயன்படுத்தி எங்கள் பகுதியில் வந்து மீன்பிடிக்கின்றனர். இதனால் எங்கள் வலைகள் பாதிக்கப்படுவதோடு கிழிந்து விடுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் அமைப்பை சேர்ந்த அருளானந்தம் கூறியதாவது:-
வலை சேதமடைந்ததற்கு உரிய இழப்பீட்டை வழங்கி வருகிறோம். ஆனால் இது இரு நாடுகளைச் சேர்ந்த தூதரகம் இணைந்து எடுக்க வேண்டிய முடிவுகளாகும்.
இருநாட்டு மீனவர்களிடையேயும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடக்கிறது.
2010 மற்றும் 2011-ம் ஆண்டில் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை மூலம் எந்த பலனும் ஏற்படவில்லை என்றார்.
மீனவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை அதிகாரிகள் ஏ.சி. ரூமில் அமர்ந்து தீர்க்க முடியாது. இரு நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்கின்றனர் இருநாடுகளையும் சேர்ந்த மீனவர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten