யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியத்துக்காக மக்கள் முன்னணியினர் மே தின ஊர்வலம் நடத்தியுள்ளார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பல பொதுமக்கள் தாமாகவே வந்து இணைந்துகொண்டார்கள். ஊர்வலம் நெல்லியடியை அடைந்தவேளை அங்கே நின்றிருந்த இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், புகைப்படங்களை எடுத்துள்ளார்கள். ஒருவர் புகைப்படத்தை எடுக்க மற்றையவர் வீடியோ எடுக்க இன்னும் ஒரு தமிழர் மோபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
இதில் யாழ்ப்பாணத்து ஜேம்ஸ் பாண்ட் ஒருவரும் அடக்குகிறார் என்று , ஊரில் உள்ள தமிழர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழரான இவர் இலங்கை இராணுவத்தோடு இணைந்து செயல்படும் நபர் எனதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. முந்தைய காலங்களிலேயே புகைப்படம் எடுத்தால், மக்கள் அச்சமடைவது உண்டு. ஆனால் இப்பொழுது அது சகஜமாக மாறிவிட்டது என்கிறார்கள் யாழ் மக்கள். எடுத்தால் எடுத்துவிட்டுப் போங்கள் என்ற நிலைக்கு மக்கள் மாறிவிட்டார்கள். அதனால் இந்த யாழ்ப்பாணத்து ஜேம்ஸ் பாண்டுகள் வேஸ்டாகிவிட்டார்கள் !
Geen opmerkingen:
Een reactie posten