*இப்ப என்ன பிளவு என்று கேட்டேன் ! வரும் மாகான சபைத் தேர்தலால் குழப்பம்தான் என்றான் இறைவன் !
*இதுக்கு முடிவே கிடையாதா என்று கேட்டேன் : தமிழன் அழியவேண்டும் பரவாயில்லையா என்றான் இறைவன் !
*ஐயோ என்றேன் நான் !
அங்கே என்ன தான் நடக்கிறது பார்ப்போமா ? அதற்கு முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றால் என்ன என்பது குறித்து சின்னதாக விளங்கிக்கொண்டால் நல்லது அல்லவா ?
விடுதலைப் புலிகளின் ஆலோசனைக்கு அமைவாக, மாமனிதர் மற்றும் ஊடகவியலாளர் சிவராம் அவர்களால், பாரிய ஒற்றுமை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாக புலிகள் பலமாக இருந்த காலத்தில் சம்பந்தர் ஐயா(தமிழரசுக் கட்சி) செல்வம் அடைக்கலநாதன்(ரெலோ) சுரேஷ் பிரேமச்சந்திரன்(ஈ பி ஆர் எல் எவ்) ஆகியோரும் மேலும் பலரும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது. நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் கட்சியை ஆனந்த சங்கரி என்னும் நரி கைப்பற்றி வைத்திருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரிடம் இக் கட்சி சிக்குண்டு இருந்த காரணத்தால் தான் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள் அதில் பெரு வெற்றியும் ஈட்டினார்கள். 2009ம் ஆண்டுக்குப் பின்னர், ஆனந்த சங்கரி தானும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைவதாக அறிவிக்க, அவரை தொடர்ந்து புளொட் சித்தார்த்தனும் தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டார்.
இவ்வாறு மெல்ல மெல்ல தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நுளைந்த இக் குள்ள நரிகள் தற்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை தாமே பதிவுசெய்து அதனை கையகப் படுத்தப் பார்க்கிறது. மகிந்தரின் நீண்ட நாள் கூட்டாளியான ஆனந்த சங்கரி, புளொட் சித்தார்த்தன் ,ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பை இன்னும் 2 வாரங்களில் பதிவுசெய்ய இருக்கிறார்கள் என்பது தமிழர்கள் தலையில் விடும் பேரிடியாக உள்ளது. இந்த முஸ்தீப்பு அனைத்தும் வட கிழக்கு மாகாண சபைத் தேர்த்தலை முன்னிட்டே படு விமர்சையாக நடக்கிறது.
தற்போது உள்ள நிலவரப்படி, ஆனந்த சங்கரியும், சித்தார்த்தனும், மற்றும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்ய முற்படுகிறார்கள். அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் ஆதரவு கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை... ஆனால் இதேவேளை தனது கொள்கைகளுக்கு இணங்கினால் தாம் புதிதாக பதிவுசெய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைவேன் என்று தமிழ் தேசியத்துக்கான கூட்டமைப்பின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். இதில் வேடிக்கையான மற்றும் விபரீதமான விளைவுகளும் இருக்கிறது. அது என்னவென்றால், சம்பந்தர் ஐயா அவர்கள் செயல்கள் தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்ட விடையம் ஆகும். அவரைப் பற்றிய நல்லபிப்பிராயம் புலம் பெயர் தமிழர்களுக்கு மத்தியிலும் இல்லை. ஆனால் அதற்காக ஆனந்த சங்கரி என்னும் குள்ள நரியின் காலில் தமிழர்கள் வீழ்வதா என்ற நிலை இங்கே இருக்கிறது.
மகிந்தரின் ஏஜன்டாகச் செயல்படும் ஆனந்த சங்கரி, சித்தார்த்தன் போன்றவர்கள் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் கட்சியை சட்டபூர்வமாகப் பதிந்து தம் பக்கம் எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கை அரசானது, முதலில் கருணாவை பிரித்து புலிகளை வெற்றிகண்டது. பின்னர் பெரும் சவாலாக திகழ்ந்த புலம்பெயர் தமிழர்களை உடைக்க, மாவீரர் தினம் முதல்கொண்டு முள்ளிவாய்க்கால் தினம் வரை இரண்டாக உடைத்தது. இங்குள்ள பல அமைப்புகளை இரண்டாக உடைத்தது. தற்போது இதேவேலையை தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் செய்ய நினைக்கிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ் கட்சிகளுக்கு இடையே பிரச்சனைகளுக்கு தூபமிட்டு அதனை ஒரு வழிபண்ணாமல் விடமாட்டார் மகிந்தர். இந்த சைக்கிள் காப்பில், டக்ளஸ் அல்லது தயா மாஸ்டர் வெல்லும் சாத்தியக் கூறுகள் அதிகரித்துச் செல்கிறது.
பிரிந்திருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் முதலில் பொது எதிரி யார் என்பதனை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். அதன் பின்னர் எமது விடுதலைக்காக செயல்படுவது நல்லது. இதனை விடுத்து படுமோசமான ஆனந்த சங்கரி போன்ற அரசியல் கோமாளிகளின் பின்னால் செல்லவேண்டுமா என்று ஒருதடவை எண்னிப் பார்ப்பது நல்லது ! இது அடியேன் கருத்து அவ்வளவுதான் !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்.
Geen opmerkingen:
Een reactie posten