தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 april 2015

அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை

இந்திய மீனவர்கள் வடக்கு கடலில் தினமும் ஒரு பில்லியன் பெறுமதியான மீன்பிடிக்கின்றனர்!– மஹிந்த அமரவீர
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 12:12.04 AM GMT ]
இந்திய மீனவர்கள் வடக்கு கடலில் நாள் தோறும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான மீன்களை பிடிப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இந்த மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி முறைமை என்ற தடை செய்யப்பட்ட முறைமையை பயன்படுத்துவதனால் மீன்வளம் அழிவடைகின்றது. ஏனைய கடல் வளங்களும் அழிவடைகின்றன.
இந்த நிலையில் இந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுப்பது குறித்து அண்மையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆண்டு தோறம் 83 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிய போதிலும், அரசாங்கப் பிரதிநிதிகள் அதற்கு இணங்கவில்லை.
தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.
அண்மைய நாட்களில் 37 இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 25 படகுகளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2ம் இணைப்பு
இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர்!– கடற்படை
இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவின் ஆலோசனைக்கு அமைய வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
மீனவர்களை கைது செய்யும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனை அவசியம்!- ஜோன் அமரதுங்க
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 12:54.46 AM GMT ]
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனை அவசியப்படுவதாக சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்துவது அவசியம் என்பதனை விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டில் அதிகளவில் கொலைகள் இடம்பெறுகின்றன.
கடந்த அரசாங்கத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
விரைவில் தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 01:12.58 AM GMT ]
திறைசேரி உண்டியலில் இருந்து 400 பில்லியன் ரூபாய்களை கோரும் யோசனை வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி கண்டதை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
திறைசேரி உண்டியல் தொடர்பான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த ஊடக மாநாட்டில் வாசுதேவ நாணயக்கார, கீதாஞ்சன குணவர்தன, சரத் குணவர்தன, வை.ஜீ. பத்மசிறி, ஜனக பண்டார, மனுஷ நாணயக்கார, ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிதி அமைச்சர் கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பல ஐ.தே.க. உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே இதனை தோற்கடித்துள்ளனர். இது ஐ.ம.சு.மு. கொள்கைக்கு முரணானது எதிர்க்கட்சி தந்திரோபாயமாக இந்த முடிவை எடுத்தது ஐ.ம.சு.மு. பாராளுமன்ற குழு கூடி இந்தப் பிரேரணை குறித்து முடிவு செய்யாததால் எமது எம்.பிகள் விரும்பியபடி வாக்களித்தனர்.
திறைசேரி உண்டியல் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற போது அதில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 31 வாக்குகளும் அரசாங்கத்துக்கு எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்தநிலையிலேயே அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt1B.html

Geen opmerkingen:

Een reactie posten