தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 april 2015

19வது திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டாம்: மாதுலுவாவே சோபித தேரர்

மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை: ரவி கருணாநாயக்க
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 02:15.55 AM GMT ]
மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திறைசேரி உண்டியல்களை அதிகரிக்கவே நாம் முயற்சித்தோம். எனினும் இறுதியில் மக்கள் மீது மேலும் சுமைகள் அதிகரித்துள்ளன.
மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
திறைசேரி உண்டியல்கள் பெற்றுக்கொள்வதற்கான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கதை விரட்டியடிக்க முடியாது.
இதன் மூலம் அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
சமூர்த்தி வழங்குவோம், இறப்பர், தேயிலை போன்றவற்றை கொள்வனவு செய்வோம்.
பண்டிகை முற்பணம், சம்பளங்கள் வழங்கப்படும் இவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 02:23.06 AM GMT ]
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 250 இந்திய மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படையினர் துரத்தியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படை வீரர்கள் தமது படகுகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

100 நாள் வேலைத் திட்டத்தில் 90 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ரணில்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 02:59.06 AM GMT ]
100 நாள் வேலைத் திட்டத்தின் 90 வீதமான வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அளித்த வாக்குறுதிகளின் பெரும்பான்மையானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்காக வரி அறவீடு செய்யப்படவில்லை.  எதிர்வரும் காலங்களில் துறைமுகத்திலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட மாட்டாது.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் எஞ்சியிருப்பது இன்னமும் 12 நாட்கள் மட்டுமேயாகும். 
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை அரசாங்கம் 88 நாட்களில் மேற்கொண்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt2A.html

19வது திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டாம்: மாதுலுவாவே சோபித தேரர்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 03:09.45 AM GMT ]
19வது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு சமூகநீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவேவ சோபித தேரர் கோரியுள்ளார்.
எதிர்ப்பார்த்திருந்த இந்த அரசியல் அமைப்பு திருத்தத்தை இனிமேல் முன்வைக்க முடியாது என்ற காரணத்தினாலே இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மறுநாள் 19வது திருத்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனவே இதன்போது அதனை தோற்கடிக்க வேண்டாம் என்று சோபித தேரர் கோரியுள்ளார்.
19வது திருத்தத்தை கொண்டு வருவதென்பது பிரதமர் உட்பட்ட பல்வேறு துறையினரின் தேர்தல் உறுதிமொழியாக இருந்தது.
இந்தநிலையில் ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதியை முறையை ஒழிக்கும் கோரிக்கையை முன்வைத்திருக்கும் ஜேவிபி, சமசமாஜக்கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகள் என்பனவும் 19ஆம் திருத்தத்துக்கு ஆதரவை வழங்கும் என்று நம்பிக்கையை தேரர் வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt2B.html

Geen opmerkingen:

Een reactie posten