தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்கக்கோரிய பிரேரணை வடமாகாணசபையில் நிறைவேற்றம்!

யாழ். நிலத்தடி நீர் பிரச்சினை! வடமாகாண சபையில் எதிர்க்கட்சிகளின் கருத்தை கூட்டமைப்பும் ஏற்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:54.06 PM GMT ]
யாழ்.குடாநாட்டில் நிலத்தடி நீர் பிரச்சினையில் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரிப்பதற்கு வடமாகாண சபையினராகிய நாமும் ஒருவகையில் காரணம் என மாகாணசபையின் 27வது அமர்வில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆமோதித்து கருத்து தெரிவித்திருக்கின்றது.
இன்றைய தினம் நடைபெற்ற 27வது அமர்விலேயே மேற்படி விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக சபையில் குறிப்பிடப்பட்டதாவது,
குறித்த நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பாக பேசப்படுகையில் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் கூட சபையில் தமது பகுதி இளைஞர்களுக்கு திருமணமாகவில்லை. குழந்தைப்பேறு கிடைக்காது என கூறுகின்றார்கள். என கருத்துக்களை தெரிவித்தார்.
அதேபோன்று நாங்கள் அனைவரும் மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையிலான கருத்துக்களை பேசியிருக்கின்றோம். அதுவே மக்கள் மத்தியில் நிலத்தடி நீர் தொடர்பான அச்சம் அதிகரிக்க காரணம் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆமோதித்துள்ளதுடன், இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வினை போக்குவதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும். அது மிக முக்கியமான ஒரு செயற்பாடாகும். என சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இந்தவிடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்களை நடத்தும் மக்கள் அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட்டாகவேண்டும்.
அதன் ஊடாகவே நிலத்தடி நீர் பிரச்சினைக்கு நாம் இலகுவான தீர்வினை காணமுடியும் என சபையில் இரு தரப்பும் கருத்துக்களை ஒத்துழைப்புடன் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUkt0A.html

சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்கக்கோரிய பிரேரணை வடமாகாணசபையில் நிறைவேற்றம்!
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:24.06 PM GMT ]
முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் தொடரும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்கக்கோரி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், நடவடிக்கைக்கு மாகாண மீன்பிடி அமைச்சு ஒப்புதல் தெரிவித்திருக்கின்றது.
கடந்த 2011ம் ஆண்டு நாயாறு பகுதியில் படையினரின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் 72மீனவர்களுக்கு கடற்றொழில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியில் சுமார் 300ற்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் வந்து தங்கியிருப்பதுடன் சட்டத்திற்கு மாறான தொழில்களையும், அவர்கள் செய்துவருகின்றனர்.
இதனால் எமது தமிழ் மீனவர்கள் கடுமையான பதிப்புக்களை எதிர்கொள்கின்றார்கள்.
எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என முதலமைச்சரிடம் கோரும் வகையில் குறித்த பிரேரணை மாகாணசபையின் 27வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் முன்மொழியப்பட்டு. தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 2ம் திகதி ஜனாதிபதியை சந்தித்து இந்திய மீனவர்கள் தொடர்பாக பேசியபோது இந்த விடயம் தொடர்பாக குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களுடைய அத்துமீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சந்தித்த போதும் விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
எனவே இவ்விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க முடியும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மத்திய கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து முன்னெடுப்போம் என டெனீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktzI.html

Geen opmerkingen:

Een reactie posten