தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

சர்வதேசத்திடம் கூறி எமது பிள்ளைகளை விடுவியுங்கள்! ஆணைக்குழு முன் கதறியழுத உறவுகள்

ரணில் விக்னேஸ்வரனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! இல்லாவிடின் போராட்டம் வெடிக்கும்: சிவாஜிலிங்கம் மிரட்டல்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:51.26 PM GMT ]
வடக்கு மாகாண முதலமைச்சரை பொய்யன் என பேசியதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
27வது மாகாணசபை அமர்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பார்த்து பொய்யன் என பிரதமர் கூறியிருக்கின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அதற்காக பிரதமர் எங்கள் முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என சபையில் கூறிக்கொண்டிருந்தார்.
இதன்போது இடையில் தலையிட்ட அவைத்தலைவர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து சபையில் பேசவேண்டாம். மாகாணசபைகள் சட்டத்தின் பிரகாரம் அது சட்டத்திற்கு மாறான விடயம் என்பதை நினைவுபடுத்தினார்.
இந்நிலையிலும் சிவாஜிலிங்கம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவைத்தலைவர் ஒலிவாங்கியை நிறுத்தினார். அதன் பின்னரும் பேசிய சிவாஜிலிங்கம் முதலமைச்சரிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும்.
அவர் அவ்வாறு மன்னிப்புக் கேட்கவில்லையாயின் நாங்கள் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். அதற்கு நாம் தயங்கப்போவதில்லை என கூறினார். அவர் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktzF.html

தேசிய அரசுக்கு முதல் அடி! திறைசேரி உண்டியல் மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் யோசனை தோல்வி
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:18.19 PM GMT ]
திறைசேரி உண்டியல் மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தின் யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இன்று நாடாளுன்றில் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது.
இந்த யோசனைக்கு ஆதரவாக 31 வாக்குகள் அளிக்கப்பட்டன.  எதிராக 52 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மேலதிக 21 வாக்குகளினால் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி உண்டியல்கள் மூலம் 400 பில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.


சர்வதேசத்திடம் கூறி எமது பிள்ளைகளை விடுவியுங்கள்! ஆணைக்குழு முன் கதறியழுத உறவுகள்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:20.27 PM GMT ]
இந்த நாட்டில் நடைபெறும் விசாரணைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே உரிய தீர்வு. அதனை செய்து எங்களது பிள்ளைகளை பெற்றுத்தர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகள் கண்ணீருடன் கதறி அழுதுள்ளனர்.
கடத்தப்பட்டோர், காணமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கல்முனையில் இரண்டாவது நாளாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு தங்களது உறவுகளை பறிகொடுத்த மக்கள் தங்களது ஆதங்கங்களையும் எண்ணக்குமுறல்களையும் கண்ணீர் மல்க கூறினார்கள்.
விசாரணையில் சாட்சியமளித்த அம்பாறைக்குட்டி தங்கமலர், 
1990 ஆம் ஆண்டு தன்னுடைய பிள்ளை கல்முனை இராம கிருஸ்ண மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காக சென்ற வேளையில் காரைதீவு இராணுவ முகாமில் இருந்து வந்த இராணுவத்தினர் என்னுடைய மகனை ஏற்றிச்சென்றார்கள்.
அதனை கேள்வியுற்று அங்கு சென்று என்னுடைய பிள்ளையை விடுதலை செய்யுங்கள் ஐயா என்று அழுது புலம்பினேன். அவர்கள் எனக்கு தந்த பதில் உங்களுடைய மகனை தாங்கள் பிடித்து வரவில்லை என்ற பொய்யைச் சொல்லி வேறு யாராவது பிடித்திருப்பார்கள் அங்கு போய் பாருங்கள் என்றார்கள்.
நானும் இதுவரை காலமாக இலங்கையில் அனைத்து பாகங்களிலும் தேடித்திரிந்து அலைந்து போய் இருக்கின்றேன்.ஆனால் இதுவரைக்கும் எனது மகன் எனது கையில வந்து கிடைக்கவில்லை. இவரை பெற்று என்னிடம் ஒப்படைக்க சர்வதேசம் முன்வரவேண்டும் என்று கதறி அழுதுள்ளார்.

.இதேவேளை கல்முனையைச்சேர்ந்த பூமணி அருளானந்தம் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்துகையில்,
1990 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் என்னுடைய பிள்ளையை இராணுவத்தினர் பிடித்துக்கொண்டு சென்றார்கள். ஆனால் இதுவரைக்கும் என்ன நிலையில் எனது மகன் இருக்கின்றான் என்பது எனக்கு தெரியவில்லை.
இவரை என்னிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காக நானும் போகாத இடமில்லை பல இடங்களுக்கும் சென்று கடைசியில் இன்று எனது மகனை கேட்டு வீதியில் இரண்டு நாட்களாக உணவின்றி, தண்ணீரின்றி தவிக்கின்றேன் என கண்ணீர் மல்கினார்.
இந்த நாட்டில் நடைபெறும் விசாரணைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வில்லை இதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே உரிய தீர்வு அதனை செய்து எங்களது பிள்ளைகளை பெற்றுத்தர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கதறி அழுதனர்.
1990ஆம் ஆண்டு இராணுவத்தின் சுற்றி வளைப்பில் பிடித்து செல்லப்பட்ட எனது மகனான சிவசுப்பிரமணியம் உயர்தரம் கற்று சித்தியடைந்திருந்தார். அவரை களுவாஞ்சிக்குடியில் இருந்து வந்த விசேட அதிரடிப்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.
ஆனால் இது வரை அவரை விடுதலை செய்யவும் இல்லை.
இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு எமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்காக அங்கு சென்றபோது கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் வைத்து எங்களை வழிமறித்த எங்கள் ஏழு போருக்கும் தலா 1000 ரூபாய் பணத்தினை தந்தார்கள்.
அதனை நாங்கள் பெற்றுக்கொள்ளாமல் எங்களுடைய பிள்ளைகளைத் தாருங்கள். பணம் தேவையில்லை என்று கூறிவிட்டு அனைவரும் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றோம். அங்கு சென்றும் எங்களுக்கு எந்த நல்ல பதிலும் கிடைக்கவும் இல்லை.
எங்களது பிள்ளைகளை இதுவரை பெற்றுத்தரவும் இல்லை பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறியழுதார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktzH.html

Geen opmerkingen:

Een reactie posten