தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்! ஐ.நா. நிபுணரிடம் வலியுறுத்திய தமிழ் கூட்டமைப்பினர்

நாடாளுமன்றத்துக்கு வர காரணங்கள் இல்லை!- மஹிந்த ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 12:27.48 AM GMT ]
நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு தற்போது எந்தக் காரணங்களும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார.
பல உறுப்பினர்கள் தமது ஆசனத்தை விட்டுத் தருவதாக கூறியுள்ள போதும் தாம இன்னும் அதனைப் பற்றி யோசிக்கவில்லை என்று ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, நாரஹென்பிட்டியி;ல் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின் போதே ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
தாம், அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தை கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரசாங்கம் தம்முடன் பணியாற்றியவர்களை விசாரணை செய்து ஊடக கண்காட்சியை நடத்துவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkqzJ.html

கொழும்பு சுற்றுவட்ட பாதையமைப்பு மதிப்பீட்டில் குறைப்பு இல்லை! அமைச்சரின் தகவலை சீன தூதரகம் மறுத்தது
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 12:54.05 AM GMT ]
கொழும்பு சுற்றுவட்ட பாதை அமைப்புக்களின் உத்தேச மதிப்பீட்டில் இருந்து 30 பிலலியன் ரூபாய்களை குறைப்பதற்கு சீனா இணங்கியிருப்பதாக கூறப்பட்ட தகவலை சீன தூதரகம் மறுத்துள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த தகவலை நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டிருந்தார்.
எனினும் குறித்த பாதை அமைப்பை மேற்கொள்ளவுள்ள சீன ஒப்பந்தக்காரர்கள் தாம் இந்த இணக்கத்தை வெளியிடவில்லை என்று தம்மிடம் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 30 பி;ல்லியன் ரூபாய்களை முன்னைய அரசாங்கத்துக்கு தரகாக வழங்கிய குற்றச்சாட்டையும் சீன தூதரகம் மறுத்துள்ளது.
இந்தநிலையி;ல் குறித்த பாதை அமைப்புக்கான மொத்த உடன்படிக்கை  66.8 பில்லியன் ரூபாய்கள் என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன ஒப்பந்தக்காரர்களின் உத்தேச மதிப்பீடு சரியானதே என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq0C.html


ஆழியவளை மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வாழ்வாதார உதவி
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 01:22.43 AM GMT ]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை
தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 1ம் திகதி ஆழியவளை பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச அமைப்பாளர் தங்கராசா காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது.
சுயதொழில் முயற்சியை ஊக்குவித்து எமது தேச மக்களை சொந்தக் காலில் தங்கி நிற்கச் செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.
ஆடுவளர்ப்பில் ஈடுபட விரும்பியவர்களுக்கு நல்லின ஆடுகளும், தையல் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு தையல் இயந்திரங்களும், வர்த்தக நடவடிக்கை செய்ய விரும்பியவர்களுக்கு வியாபார பொருட்களும், கோழி வளர்ப்பில் நாட்டம் உள்ளவர்களுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளும், கடற்தொழில் செய்ய விரும்பியவர்களுக்கு கடற்தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திட்ட இணைப்பாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கி வைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq0G.html

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்! ஐ.நா. நிபுணரிடம் வலியுறுத்திய தமிழ் கூட்டமைப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 01:26.17 AM GMT ]
ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தினர்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இவ்வாறு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும்பொருட்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் ஐ.நா. சிறப்பு நிபுணர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சிப்பீடத்தில் ஏறிய புதிய அரசு, தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று வாக்குறுதியளித்துள்ளது.
ஆனால், இந்த வாக்குறுதிகளை செயலில் காட்டுவதில் தாமதம் காட்டுகின்றது இந்த அரசு.
எனவே, வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல்போனோர் விவகாரம் உட்பட மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும், இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இதற்கு ஐ.நாவின் அழுத்தம் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று கூட்டாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.
சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினை ஒலிக்க இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே, இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq0H.html

Geen opmerkingen:

Een reactie posten