[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:31.08 PM GMT ]
கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் மா.செல்வராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கே.ஜெயசிங்கம்,கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரி.தேவராஜா,மட்டக்களப்பு கலாசார திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எம்.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த கூத்துப்பெருவிழா தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற்றதுடன், கூத்துவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கூத்துக்கலைஞர்கள் கலந்துகொண்டு தமது பாரம்பரிய கூத்துக்கலையினை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் இறுதியில் கூத்துக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,விசேடமாக சிறுவர்களுக்கு கதைகூறுவதில் சர்வதேச ரீதியில் மங்காபுழுடன் திகழும் மாஸ்டர் சிவலிங்கம் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த கூத்துப்பெருவிழா தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற்றதுடன், கூத்துவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கூத்துக்கலைஞர்கள் கலந்துகொண்டு தமது பாரம்பரிய கூத்துக்கலையினை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் இறுதியில் கூத்துக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,விசேடமாக சிறுவர்களுக்கு கதைகூறுவதில் சர்வதேச ரீதியில் மங்காபுழுடன் திகழும் மாஸ்டர் சிவலிங்கம் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பின் கூத்துக்கலையின் பாரம்பரியம் தொடர்பிலான நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.இளம் தலைமுறையினர் மத்தியில் கூத்துக்கலையின் பாரம்பரியத்தை கொண்டுசெல்லும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த நூலின் விற்பனை மூலம்பெறப்படும் பணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் பங்களிப்பினை வழங்குமாறு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவசிங்கம் வேண்டுகோள்விடுத்தார்.
இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் இசை கலைஞர்கள் ஒன்றியத்தின் தலைவி மரியா டோரன் கலந்துகொண்டதுடன் சுவிஸ் நாட்டின் அழகியல் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டி மோசன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqzF.html
இலங்கை தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும்!- லண்டனில் யோசனை நிறைவேறியது
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 12:14.41 AM GMT ]
போரோ ஒவ் ரெட்பிரிஜின் சபை (London Borough of Redbridge) இந்த யோசனையை நிறைவேற்றியுள்ளது
இது தொடர்பாக கோரிக்கை பிரித்தானிய பிரதமரிடமும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் விடுக்கப்பட்டுள்ளது
இந்த யோசனையை கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் போல் கெனல் முன்மொழிந்தார்.
இதனையடுத்து யோசனைக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. இந்தநிலையில் யோசனை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் இனப்படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் நடைமுறை அரசாங்கம் வரை எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்சினைக்கான அடிப்படை காரணிகளுக்கு தீர்வைக் காணவில்லை என்று யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டமையானது, பிரித்தானியாவில் இருக்கும் இலங்கையில் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் உறவுகளுக்கு சாத்தியமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக அமர்வுக்கு தலைமை தாங்கிய தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழு தலைவர் லி ஸ்கொட் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkqzH.html
Geen opmerkingen:
Een reactie posten