தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

கோயிலுக்குச் சென்ற அனந்தி சசிதரனுக்கு அனுமதி மறுப்பு!

பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் வாக்குமூலம் அளிப்பார்?
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 03:46.25 PM GMT ]
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இவ்வாறு பசில் ராஜபக்ச வாக்கு மூலம் அளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராபஜக்சவின் சட்டத்தரணி உதய ரொசான் டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பசில் ராபஜக்ச அமெரிக்காவிலிருந்து வியட்நாம் சென்றுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலக் குறைவினால் அமெரிக்காவில் சில மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்தவுடன் கைது செய்யுமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ச வாக்கு மூலம் ஒன்றை அளிப்பார் என்றே அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுää கைது தொடர்பில் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
பசில் ராஜபக்ச, 20ம் திகதியின் பின்னர் நாடு திரும்புவார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் உறுதியான திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில், முன்னிலையாகி வாக்குமூலம் அளிப்பார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அனைத்து தவறுகளுக்கும் கடந்த அரசாங்கமே பொறுப்பு: துமிந்த
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 03:59.32 PM GMT ]
நாட்டில் இடம்பெற்ற அனைத்து தவறுகளுக்கும் கடந்த அரசாங்கமே பொறுப்பு என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை மெய்யாகவே மன்னர்களாக்கி அவர்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.
நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மட்டும் அதனைச் செய்ய முடியாது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரித்து அவற்றுக்கு உரிய விலைகளை வழங்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானது அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks5D.html

ஊனமுற்ற படைவீரர்களுக்கான கொடுப்பனவு 55 வயதின் பின்னரும் வழங்குவது குறித்து கவனம்
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 04:09.29 PM GMT ]
ஊனமுற்ற படைவீரர்களுக்கான கொடுப்பனவு 55 வயதின் பின்னரும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது ஊனமுற்ற படைவீரர்களுக்கு 55 வயது வரையில் உதவு தொகை வழங்கப்படுகின்றது.
இந்த தொகையை 55 வயதின் பின்னரும் தொடர்ச்சியாக வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக இதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் படைவீரர் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குச் சென்ற அனந்தி சசிதரனுக்கு அனுமதி மறுப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:35.51 AM GMT ]
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிப்பதாக படைத்தரப்பு அறிவித்திருந்தது.
இதற்கு முன்னரும் பக்தர்களில் ஒரு பகுதியினரை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைத்துச் சென்றிருந்த நிலையில் அங்கு அமைந்திருந்த மாட்டுப் பண்ணைகள் போன்றவை தொடர்பில் தகவல்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் தான் பிறந்த பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை உள்ளே அனுமதியாது படையினர் நேற்று திருப்பி அனுப்பியுள்ளனர்.
முதலில் அவரது கைத் தொலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளை கையளித்துவிட்டு உள்ளே செல்லுமாறு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் தான் ஒரு மாகாணசபை உறுப்பினரெனவும், தனது கைத் தொலைபேசியையாவது கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் அனந்தி கோரியுள்ளார்.
இதன்போது எழுந்த முரண்பாட்டையடுத்து அவரை உள்ளே செல்ல படையினர் அனுமதிக்கவில்லை. இதனிடையே அவர் சென்ற முச்சக்கர வண்டியை படையினர் சுற்றி வளைத்துக் கொண்டதாகவும், எனினும் இராணுவப் பொலிஸார் தலையிட்டு அவரை வெளியேற அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks5F.html

Geen opmerkingen:

Een reactie posten