தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

முறைப்படி அறிவிப்பு வந்தால் எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி என்கிறார் சம்பந்தன்!

19வது திருத்தத்துக்கு சு.க. ஆதரவு வழங்காது! நாட்டின் பொருளாதாரம் பின்னடைவு!- எதிர்க்கட்சித்தலைவர்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:05.43 AM GMT ]
அரசியல் அமைப்பு விதிமுறைக்கு முரணான வகையில் 19 வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்ற முயற்சிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு 19வது திருத்தத்திற்கு கிடைக்காது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்
எதிர்வரும் 10ம் திகதி பாராளுமன்றத்தில் 19வது திருத்தம் விவாதத்திற்கு உப்படுத்தக்கூடாது. கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 19 வது திருத்தச்சட்டம் அரசியல் அமைப்பின் வெளிப்பாடுகளுக்கு முரணானது.
19வது திருத்தச்சட்டம் ஜனாதிபதி முறைமையினை நீக்குவது மட்டும் அல்லாது சுயாதீன ஆணைக்குழுவினை செயற்படுத்துவதும் தேர்தல் முறைமையில் மாற்றத்தினை கொண்டு வருவதுமேயாகும்.
ஆனால் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவோம் எனக் கூறிக்கொண்டு ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதை பிரதமரின் அதிகாரமாக மாற்றவே முயற்சிக்கின்றனர்.
எனவே எதிர்வரும் 9ம், 10ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் 19 வது திருத்தம் தொடர்பிலான விவாதம் இடம் பெறக்கூடாது.
மாறாக மீண்டும் அரசியல் அமைப்பிற்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் முறைமையாக மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு விடப்பட வேண்டும்.
எனவே முறையான செயற்பாடுகளை கையாளும் வரையில் எமது ஆதரவு கிடைக்கப் போவதில்லை.
அதேபோல் 19 வது திருத்ததத்தை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தாது தேர்தல் முறைமையில் மாற்றத்தினை கொண்டு வந்து இரண்டு திருத்தங்களையும் ஒன்றாக செயற்படுத்துவதாயின் நாம் இணக்கம் தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் கடன் பெற்றே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உள்ளது - எதிர்க்கட்சித்தலைவர்
அரசாங்கம் கடன் பெற்றுக் கொண்டே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இம்மாத சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் 400 பில்லியன் ரூபா திறைசேரி பிணைகளை வெளியிட உள்ளது.
இது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றில் இன்று விவாதிக்கப்படவிருந்த உரிமைப் பதிவு குறித்த சட்டம் இன்று விவாதிக்கப்படாது, நாளைய தினம் விவாதிக்கப்பட உள்ளது.
அரசாங்கம் 100 நாட்களுக்கு முன்னதாகவே பிணைப்பத்திரங்களை விநியோகம் செய்ய நேரிட்டுள்ளது.
பிணைப்பத்திரங்களை விநியோகம் செய்தே அரச ஊழியர்களின் இம்மாத சம்பளத்தை 10ம் திகதிக்கு முன்னதாக வழங்க உள்ளது.
இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள பிணைப்பத்திரம் குறித்த யோசனைத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், அரச ஊழியர்கள் புத்தாண்டை கொண்டாட முடியாது.
கடன் பெற்றுக்கொள்ளாது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என வாய்ச் சாவடால் விட்ட ஆளும் கட்சியின் பொருளியல் நிபுணர்கள், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks5H.html

மே தினமன்று மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த ஆகியோர் ஓரே மேடையில் ஏறுவார்கள்!- அனுர பிரியதர்சன
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:16.36 AM GMT ]
எதிர்வரும் மே தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே மேடையில் ஏறுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் மைதானத்தில் இம்முறை சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இரண்டு ஜனாதிபதிகளும் அழைப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
மே தினக் கூட்டம் தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று பேரணிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை நடத்தவுள்ளது.
இந்தப் பேரணிகளுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உழைக்கும் மக்களுக்கு பாரியளவில் சேவையாற்றியுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் ஆட்சிக் காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.
விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி ஒன்று அமைக்கப்படும் என்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பதனை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை கூட்டம் நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அனுர பிரியதர்சன யாபா இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks5I.html


முறைப்படி அறிவிப்பு வந்தால் எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி என்கிறார் சம்பந்தன்!
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:51.12 AM GMT ]
பாராளுமன்ற சம்பிரதாய பூர்வங்களுக்கு அமைவாக முறையாக அறிவிப்பு வெளியானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உரியது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதற்கான விடை இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் கூட்டமைப்பின் தலைவருக்கும் சபாநயகர் சமல் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.
இவ்விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தேசிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு ஆகியன காணப்படுகின்றன.
இந்நிலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் மூன்றாவதாக அதிக ஆசனங்களைக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உள்ளது.
ஆகவே பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக அந்தப் பதவி முறையாக அறிவிக்கப்படுமாகவிருந்தால் எமக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உரியதாகும்.
இன்றைய தினம் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கும் எனக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால், அது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதேநேரம் எமக்கு கிடைக்காது விட்டால் அது குறித்து நாம் கவலைப்படப் போவதுமில்லை. நாம் தொடர்ந்தும் மக்கள் சார்பாக உறுதியாக நியாயமாக செயற்படுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks5G.html

Geen opmerkingen:

Een reactie posten