[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 02:29.57 PM GMT ]
தாம் அரசியலுக்கு வருவதில் விருப்பம் கொண்டிருப்பதாக அண்மையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவாராயின், நாம் அதற்கான வாய்ப்பை கொடுப்போம். எமது கட்சி அதற்கு தயாராக இருக்கிறது என்றும் சேனக்க ஹரிப்பிரிய கூறியுள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்பவர் அரசியலில் பிரவேசிக்க வேண்டியதொரு நபர் என்று வர்ணித்துள்ள அவர், அதற்கான முழு ஒத்துழைப்பினையும் தாம் எப்போதும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ ஏதாவதொரு கட்சியில் இணைந்து அரசியில் ஈடுபடக்கூடும் என தெற்கின் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 04:04.02 PM GMT ]
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னணியின் உதவி தலைவர் பியசிறி விஜேநாயக்க கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரை அவர், மக்களால் தோல்வியடைய செய்யப்படவில்லை.
எனவே அவர் அரசியலுக்குள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
விரும்பினால் என்னை விலக்கி விடுங்கள்!- நிமல் சிறிபால டிசில்வா
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 04:11.42 PM GMT ]
நாடாளுமன்றத்தில் இன்று உணர்வுபூர்வமாக உரையாற்றிய அவர், சபாநாயகர் வழங்கும் எந்த தீர்ப்பையும் ஏற்க தாம் தயார் என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் பங்கேற்றுள்ளமையால் அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதன்போது அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு ஆதரவை வெளியிட கரசோசம் எழுப்பினர்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt6J.html
யாழ். வடமராட்சியில் ஊடகவியலாளருக்கு 17ம் திகதிவரை விளக்கமறியல்!
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 04:31.37 PM GMT ]
சிறுமி ஒருவரை பொலிஸ்காரர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற செய்தியை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் இதுபற்றி தெரியவருவதாவது,
இன்று காலை 10 மணிக்கு நெல்லியடிப் பொலிஸாரால் விசாரணைக்கு என அழைக்கப்பட்டிருந்த அவர், பிற்பகல் 2 மணியவில் பருத்தித்துறை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
பாடசாலை மாணவி ஒருவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார் என முறையிடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸார் நீதிமன்றத்தில் "ஏ' அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். எனினும் எந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இந்தநிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt7A.html
Geen opmerkingen:
Een reactie posten