[ புதன்கிழமை, 15 மே 2013, 03:44.09 PM GMT ]
யாழ்ப்பாணத்திலிருந்து முன்னாள் போராளிகள் 1,000 பேர் சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் 3,500 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன், இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 2500 பேரின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஆ.சிவசுவாமி தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்ட செயலக புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்திற்கு சுயதொழில் கடனுதவிக்கு விண்ணப்பிக்க வரும் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வெளியேறிய அத்தாட்சி பத்திரம் உட்பட ஆள் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள், வதிவிட அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, தற்போது 500 பேருக்கு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலகு வட்டி வீத அடிப்படையில், வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு மூன்றாம் கட்டமாக அவர்கள் விரும்பிய தொகை கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடனுதவிகள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் மேஜர் ஜகத் குமார தெரிவித்தார்.
யாழ். மாவட்ட இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட காணி அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?
[ புதன்கிழமை, 15 மே 2013, 01:11.39 PM GMT ]
கடந்தாண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ஆ.சிவசுவாமி, அண்மையில் காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பதற்கான ஒப்புதலை இவரே வழங்கியிருந்தார்.
இதேவேளை, கடுமையான மன அழுத்தத்தினால் கடந்த மாதமே இவர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னரே அவர் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
மேலும் கடிதம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து அவர் கடமைக்குச் செல்லவில்லையெனவும் தெரிவிக்கப்படுவதுடன், இந்த தகவல் குறித்து மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, அது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten