தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 mei 2013

உடையார்கட்டி​ல் மாணவி மீது தவறாக நடக்க முயன்ற இராணுவப்பு​லனாய்வாளர்!- நடவடிக்கை எடுக்க பின்னடிப்பு​!!


புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து, சுவீடனில் அடைக்கலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:55.21 PM GMT ]
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக டுபாயில் அடைக்கலம் கோரியிருந்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் டுபாயில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
45 பேர் இந்தப் படகில் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படகுப் பயணிகளில் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடையார்கட்டி​ல் மாணவி மீது தவறாக நடக்க முயன்ற இராணுவப்பு​லனாய்வாளர்!- நடவடிக்கை எடுக்க பின்னடிப்பு​!
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:04.07 AM GMT ]
உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று (20.05.2013)  காலை 7 மணியளவில் பாடசாலையை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் கையை பிடித்து மறைவான இடத்தை நோக்கி இழுத்துச்சென்றவேளை குறித்த மாணவி கூக்குரல் எழுப்பியதும் அயலில் மாடு கட்டிக்கொண்டிருந்த ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
இதன்போது புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியபோது அங்கு சூழ்ந்துகொண்ட பொதுமக்களில் ஒருவர் அவரைத் தாக்கியுள்ளார்.
இதன் பின்னர் இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவேளை குறித்த நபர் இராணுவத்தினை சேர்ந்தவர் அல்ல எனவும், வியாபாரியாக இருக்கலாம் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் குறித்த நபரை பொலிஸில் ஒப்படைக்க தாம் நடவடிக்கை எடுக்கின்றோம் என மக்கள் தெரிவித்த வேளை குறுக்கிட்ட இராணுவத்தினர் தாம் விசாரிப்பதாகக் கூறியதுடன் குறித்த நபரையும் மாணவியின் பெற்றோரையும், அவரைத் தாக்கிய நபரையும் மட்டும் படைமுகாமுக்குள் அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எச்சரித்துள்ளனர்.
இதனால் பயம்கொண்ட பெற்றோரும் ஏனையோரும் மேலதிக நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
இதேவேளை பாடசாலை ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஊர் மக்கள் ஆலோசித்தபோது பாடசாலை அதிபர் ஸ்ரீதரன் அதனை மறுத்துள்ளதாகவும், அப்பிரதேச ஆர்.டி.எஸ் அமைப்பும் இராணுவத்திற்கு சார்பான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாடசாலை அதிபர் இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர் ராஜ்குமார் என்பவருடன் தொடர்புகொண்டதை தொடர்ந்து முல்லைத்தீவு படைமுகாமின் பொறுப்பதிகாரி மார்க் என்பவருடன் தொடர்புகொண்ட கல்விப்பணிப்பாளர் இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றவேளை அவ் அதிகாரி விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் தேராவில் தேக்கங்காட்டில் அமைந்துள்ள இராணுவத்தினருக்கு அறிவித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேக்கங்காட்டு படைமுகாமிலிருந்து இராணுவத்தினர் விசாரணைக்கு வந்தபோதிலும் ஏற்கணவே இராணுவத்தினால் பயமுறுத்தப்பட்ட பெற்றோரும் மக்களும் சாட்சியத்தை வழங்க தயங்கியுள்ளனர்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களை தொடர்பு கொண்ட குறித்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்ததுடன் அது சம்மந்தமாக சரியான அறிவித்தல்கள் தந்தால் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், ஆர்.டி.எஸ் தலைவர் ஆகியோர் இராணுவத்திற்கு சார்பான செயற்பாட்டாளர்கள் ஆகையில் இச்சம்பவம் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்க முடியாது அப்பிரதேச மக்கள் திண்டாடுவதோடு, பல இன்னல்களுக்கு மத்தியிலும் தன்மானத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தை சிங்களவர்களுக்கு விற்க நினைக்கும் இவர்கள் பற்றியும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2ம் இணைப்பு
முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை சென்ற மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற புலனாய்வாளர்
முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் பகுதியில் உடையார்கட்டு மகாவித்தியாலயத்திற்கு உயர்தரம் கற்பதற்காய் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளரால் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி வழமையாக பாடசாலை செல்வது போன்று நேற்று காலை (திங்கள்) தனது துவிச்சக்கரவண்டியில் பயணத்தை ஆரம்பித்து சென்று கொண்டிருக்கையில் 7.00 மணியளவில் முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் அடர்ந்த காட்டுப் பகுதியல் தனிமையில் சென்ற மாணவியை சிவப்பு நிற உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் தள்ளி விட்டு அடர்ந்த காட்டுக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கையில் மாணவி கூச்சலிட்டதால் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டார்.
இவ் நாசகார வேலையில் ஈடுபட்ட இராணுவப் புலனாய்வாளரை இனம் கண்ட பிரதேச வாசிகள் பெற்றாரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை உடையார்கட்டு மகாவித்தியாலய அதிபர் மற்றும் கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர் ஆகியவர்கள் அதனைத் தடுப்பதுடன் இச் செயட்பாட்டை மூடிமறைக்க முயற்சிப்பதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடததக்கது.

Geen opmerkingen:

Een reactie posten