தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 mei 2013

வடக்கு தேர்தல் பிரசாரம் வந்த வேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி


எவ்வாறான முரண்பாடுகள் காணப்பட்டாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை!- ஹக்கீம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 01:57.49 AM GMT ]
எவ்வாறான முரண்பாடுகள் காணப்பட்டாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவியை விட்டு விலகப் போவதாக ஆசிரிய தலையங்கங்கள் எழுதியுள்ளனர்.
எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
அது தொடர்பிலான விமர்சனங்களை தொடர்ந்தும் முன்வைப்பேன்.
இதன் மூலம் அரசாங்கத்தை விட்டு விலகி விடுவோம் என அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் இணைந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு தேர்தல் பிரசாரம் வந்த வேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி
[ புதன்கிழமை, 08 மே 2013, 03:13.39 AM GMT ]
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார்.
ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் தான் நெருக்குவேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் தான் எடுக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப்பொழுதே வடக்கு தேர்தலில் அரசாங்க தரப்புக்கள் தமக்குள்ளே உள்ள போட்டி காரணமாக ஒருவரை ஒருவரை விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten