தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

மகசினில் தமிழ் கைதிகளுக்கு ஆபத்து!!


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனால் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பெரும்பான்மையினக் கைதிகளை வேறு பிரிவுக்கு மாற்றுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகசின் சிறைச்சாலையில் ஜி.எச் பிரிவில் 51 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் 15 பெரும்பான்மையினக் கைதிகளும் இவர்களின் பிரிவுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பெரும்பான்மையினக் கைதிகளுடன் தம்மைத் தடுத்து வைக்க வேண்டாமெனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எம்.குமரகுருபரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மகசின் சிறைச்சாலையின் அத்தியட்சகர் எமில் ரஞ்சனுடன் குமரகுருபரன் உரையாடியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்து குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரும்பான்மையினக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிறைச்சாலை அத்தியட்சகரிடம் குமரகுருபரன் கோரிக்கை விடுத்தார்.
கைதிகளைத் தமிழ், சிங்களம் என நாம் வேறுபடுத்த முடியாது. ஆனாலும் தமிழ்க் கைதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படுமென்று மகசின் சிறைச்சாலை அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten