[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 11:45.58 PM GMT ]
யாழ்.மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் எஸ்.கஜதீபன் ஆகியோர் முதன்முறையாக அனலைதீவிற்கு விஜயம் செய்தனர்.
இவர்கள் அங்கு மக்களைச் சந்தித்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பாடசாலைகளுக்கும் இவர் சென்று மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
இவர்கள் அனலைதீவிற்கு விஜயம் செய்த செய்தி அறிந்து கொண்ட புலனாய்வாளர்கள் விசேட படகில் அனலைதீவிற்கு விஜயம் செய்து கூட்டமைப்பினரை அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
இவர்கள் கலந்து கொண்ட சகல இடங்களுக்கும் சென்று மக்களையும் அச்சுறுத்திய இவர்கள் படகிலும் தொடர்ந்து வந்துள்ளனர்.
இதேவேளை அனலைதீவு ஐயனார் கோயில் ஆகிய கோயில்களுக்கும் இவர்கள் விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, அனலைதீவு மனோன்மனி ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டார்.
புலிகளின் யாழ். மாவட்ட தலைவர் எனக் கூறி கப்பம் பெற்ற அரச ஊழியா் கைது
[ சனிக்கிழமை, 18 மே 2013, 12:06.05 AM GMT ]
கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் கடந்த 3ம் திகதி யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு, கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் 3 மாத கால தடுத்து காவலில் வைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
இந்த விசாரணையின் பின்னரே முகமாலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை இன்று கைது செய்துளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெயய்ப்பட்ட இவர் யாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.
முன்னர் கைது செய்யப்பட்ட இருவருடன் இணைந்து, வியாபார நிலையங்களில் கப்பம் பெறுவதற்கு முழு உதவிகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் யாழ். சுகாதார திணைக்களத்தில் கடமையை முடித்துக் கொண்டு வெளியே வந்த வேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten