தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

புலிகளின் தாக்குதல் படகை தரையில் ஓட்டிப் பார்க்கும் இராணுவம் !




இயந்திரம் பொருத்தப்படாமல், கைகளால் இயக்கப்படக்கூடிய நீர் மூழ்கி தாக்குதல் கலம் பலவற்றை புலிகள் சொந்தமாக வடிவமைத்திருந்தார்கள். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் அமைந்திருந்த இத் தொழிற்சாலையை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தார்கள். அங்கே அவர்கள் கண்டெடுத்த பல தாக்குதல் படகுகள், அவர்களை அதிர்சியில் ஆழ்த்தியது. இதுபோன்ற தாக்குதல் படகுகள் மற்றும் நீர்மூழ்கிக் கலங்களை புலிகளே வடிவமைத்து தயாரித்தார்களா என்று அவர்கள் ஏங்கிப் போனார்கள். 

இதேவேளை பெரும் சத்தம் எழுப்பாது, ஓசையின்றி கைகளால் இயக்கக்கூடிய தாக்குதல் படகு ஒன்றை இலங்கை இராணுவம் மீட்டவேளை, கடலுக்கு அடியில் செல்லவேண்டிய இக் கலத்தை தரையில் தனது நண்பர்களைக் கொண்டு தூக்கச் சொல்லி அது எவ்வாறு இயங்கும் என்று பரீட்சித்துப் பார்க்கிறார் ஒரு இராணுவச் சிப்பாய்(புகைப்படம் இணைப்பு). அதுமட்டுமல்லாது முற்று முழுதாக புலிகளால் வடிவமைக்கப்பட்ட நீர் மூழ்கி கலன் ஒன்றையும், இலங்கை இராணுவம் பரீட்ச்சித்து பார்க்கும் காட்சிகளும் புகைப்படமாக இங்கே பதிவாகியுள்ளது.



Geen opmerkingen:

Een reactie posten