தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

பெரும் படையுடன் முற்றுகையிடப் போவதாக பொதுபல சேனா மீண்டும் எச்சரிக்கை


போலியான முறையில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்த பெண் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 03:37.36 PM GMT ]
போலியான முறையில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் போலியான ஆள் அடையாளத்தை காண்பித்து வீசா பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
கணவருடன் இணைந்து கொள்வதற்காக இந்தப் பெண் வீசா கோரி விண்ணப்பித்திருந்தார்.
எவ்வாறெனினும், இந்த வீசா விண்ணப்பத் தகவல்களில் போலியான தகவல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலியான முறையில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து ஆண்டுகால பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோசடியான முறையில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமைக்காக வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பெரும் படையுடன் முற்றுகையிடப் போவதாக பொதுபல சேனா மீண்டும் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 03:53.29 PM GMT ]
குருகலவில் தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டுள்ள அதிகாரிகளை பொதுபல சேனா அமைப்பு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாங்கொட குருகல பிரதேசத்தில் உள்ள கட்டடங்களை மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றாது போனால், 05 ஆயிரம் பேருடன் வந்து குருகலவை முற்றுகையிடப் போவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் சின்னத்தை கொண்ட வேன் ஒன்றில் சென்ற இந்த குழுவினரில் கண்டி மற்றும் பெப்பிலியான விகாரைகளின் பிக்குமாரும் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருகல பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல் உள்ளிட்ட ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Geen opmerkingen:

Een reactie posten