தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

சாமிளா பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறியது: மருத்துவர் !


கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சாமிளா (23 வயது) என்ற இளம் யுவதி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தபோது பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்யப்பட்டார், என்ற செய்தி அனைவராலும் அறியப்பட்ட விபரம். குறிப்பிட்ட மருத்துவர் தாம் சாமிளாவை கற்பழிக்கவில்லை என்று கூறிவருகிறார். இன் நிலையில் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

சம்பவ தினத்தன்று சாமிளா அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்து கொண்டிருந்தார். அபாயகரமான நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரை வெளியேற்றுவதற்காக டியூப் ஒன்றை பிறப்புறுப்பில் உட்செலுத்த முயன்றபோது, பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது என்று வைத்தியரான அசேல நேற்று சாட்சியமளித்தார். ஆடைத் தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு விசாரணை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது சாட்சியமளிக்கையிலேயே சாமிளா சிகிச்சை அளித்த வைத்தியரான அசேல மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். வைத்தியசாலையில் அன்றையதினம் கடமையாற்றிய தாதி ஒருவரும் மன்றில் நேற்று சாட்சியமளித்தார். இச்சம்பவம் தொடர்பாக அந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். மேற்படி சிகிச்சைக்கு சென்ற சாமிளாவை, முதலில் மயக்க ஊசி போட்டு மயக்கி பின்னர் அவரை மருத்துவர் கற்பழித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten