[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:19.29 AM GMT ]
மேலும், சில கடும்போக்குவாத சக்திகளின் தேவையற்ற அடக்குமுறைகள் குறித்து முஸ்லிம்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், பொலிஸார் அதனை கவனத்திற் கொள்ளத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு, மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தமிழ், முஸ்லிம் கட்சியின் தலைவருமான அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
17ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்யும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்வது அநீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் எனவும், 19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார்!
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:34.16 AM GMT ]
இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அசாத் சாலிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்துக்குமிடையில் மிக இரகசியமான முறையில் இடம்பெற்றதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எட்டு நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட அசாத் சாலி, பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டபோது அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டமை தெரிந்ததே.
Geen opmerkingen:
Een reactie posten