தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

பிரபாகரன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை!– திவயின !!


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் கைவிரல் அடையாள சாட்சியங்களின் மூலம் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கைவிரல் அடையாள மாதிரிகளும், நந்திக்கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தின் கைவிரல் அடையாள மாதிரிகளும் ஒத்துப் போவதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி புலிகளின் மூன்று படகுகளை கடற்படையினர் தாக்கி அழித்ததாகவும், எவரும் தப்பிச் செல்லவில்லை எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten