தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 mei 2013

யுத்தம் முடிந்த பின் வன்னியில் எவரும் காணாமல் போகவில்லை! முடிந்தால் நிரூபிக்கட்டும்!


மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 05:47.19 PM GMT ]
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெறவுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி மே-18ம் திகதி மதியம் 1 மணிக்கு North carriage Drive,Hyde Park [W1C 1LX]  இடத்திலிருந்து ஆரம்பிக்கும்.
அருகாமையில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையம் [Closest Tube Station, Marble Arch] இங்கிருந்து ஆரம்பித்து பிற்பகல் 5 மணியளவில் WATERLOO Palace , Westminster (SW1 Y4AU) என்னும் இடத்தில் நிறைவடையும். அருகாமையிலுள்ள நிலக் கீழ் தொடருந்து நிலையம் [Piccadilly  Circus ] அதனைத் தொடர்ந்து தாயகம் மற்றும் தமிழகத்திலிருந்து வருகை தரும் தமிழின உணர்வாளர்களின் உரையும் இடம் பெறும்.
பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி.
நாங்கள் இன்று வரலாற்றின் முக்கிய தருணத்தில் நிற்கின்றோம், ஒரு புறம் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் வெளிவந்து உலகின் மனச்சாட்சியை உலுப்புகின்றது. மறுபுறம் அப்பாலகன் அடங்கலாக பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கரங்களோடு இலங்கை அரசு நடாத்தும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எமது பிரித்தானிய பிரதமர் செல்ல தயாராகின்றார்.
சனநாயக விழுமியங்களை மதிக்கும் நாட்டின் பிரதமர் ஒரு இனப்படுகொலை அரசின் அழைப்பை ஏற்று அங்கு செல்வது ஒரு வரலாற்று துயரம், அதை நாம் சனநாயக வழியில் எதிர்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் நாம் செய்யவிருக்கும் ஒவ்வொரு போராட்டமும் பிரதமரின் அலுவலகத்துக்கும் , பக்கிங்காம் அரண்மனைக்கும் ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
சாட்சியங்கள் அற்ற நிலையில் நடாத்தப்பட்ட போரின் சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.
நாங்கள் கேட்பது எல்லாம் அப்போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களும் ஓர் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே.
அவ்வாறான விசாரணை ஒன்று ஆரம்பித்தாலே அது ஈழத்தில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என நிரூபணமாகும் மக்கள் சக்தியே மகத்தான சக்தியாகும், எமது உணர்ச்சியும் எழுச்சியும் ஒரு சக்தியாக வெளிப்படும் போது அது பலனை தந்ததை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். லண்டன் பேரணிகள் தமிழர் போராட்ட வரலாற்றில் மைற் கல்கள். அவ்வாறான ஒரு மைற் கல்லுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை மீண்டும் அழைக்கின்றது.
2009ம் ஆண்டு பேரணிகள் ஏற்படுத்திய மாற்றங்கள்
தமிழர் தொடர்பான பிரித்தானியாவின் கொள்கைகளில் ஒரு மாற்றத்தை 2009ம் ஆண்டு பேரணிகள் ஏற்படுத்தின. ஈழப்போரை ஒரு பயங்கரவாதப் போராக தடைசெய்த பிரித்தானிய அரசு, பின்னர் தமிழர்களின் நியாயங்களை ஓரளவு உணர்வதற்கு தலைப்பட்டதே 2009ம் ஆண்டில் நடைபெற்ற பேரணிகளின் பின்னர்தான். வீதியில் மக்கள் திரண்ட அந்தப்பொழுதுகளில் தான் பிரித்தானிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தோம்.
2009களில் லட்சக்கணக்கில் நாம் தேம்ஸ் நதியோரம் நீதி கேட்டு நடந்தோம் , உலகின் ஊடகங்களில் கவனத்தை வன்னி நோக்கி திருப்ப வேண்டி நடந்தோம்  அதே போன்ற தருணம் மீண்டும் வந்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக லட்சக்கணக்கில் வீதியில் நடந்தால் அது பிரித்தானிய பிரதமரின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது.
இலங்கை தீவில் நடைபெற்ற இனப்படுகொலையின் மீது சர்வதேச விசாரனை நடாத்தப்பட வேண்டும் , நீதிக்கு புறம்பான விதத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், முஸ்லீம் மக்களுக்கு எதிராக அரச ஆதரவோடு உருவாகி வரும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களை இலங்கை மதிக்க வேண்டும் அதுவரை இலங்கை பொதுநலவாயத்திலிருந்து விலத்தி வைக்கப்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் லண்டன் வீதிகளில் அணிதிரள்வோம் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இனப்படுகொலைக்கு நீதி கோரி ஏனைய நாடுகளில் இடம்பெறும் பேரணி தொடர்பான விபரங்களுக்கு

யுத்தம் முடிந்த பின் வன்னியில் எவரும் காணாமல் போகவில்லை! முடிந்தால் நிரூபிக்கட்டும்!
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 09:17.53 PM GMT ]
யுத்தத்திற்குப் பின் வன்னி மாவட்டத்தில் எவரும் காணாமல் போகவில்லையென்றும் அப்படி யாராவது காணாமல் போயிருந்தால் அது யாரென்றும் எப்போது எங்கு காணாமல் போனாரென்று தெரியப்படுத்தினால் நல்லது.
அவ்வாறு தெரியப்படுத்தினால், தான் அது சம்பந்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவாதத்திற்கு தயாரென்றும் வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியும் வடக்கின் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா தெரிவித்தார்.
யுத்தத்திற்குப் பின் வன்னியில் எவரும் காணாமல் போகவோ அல்லது கடத்தப்படவோ இல்லையென்றும் அவ்வாறு யாராவது கூறுவதாக இருந்தால் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளத் தயாரென்றும் வன்னி கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
காணாமல் போதல் மற்றும் கடத்தல் தொடர்பாக அரசுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்துவோர் தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் வன்னி கட்டளை தளபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்தத்தின் போது தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம், சிங்கள மக்களும் காணாமல் போனதாக சுட்டிக் காட்டும் பொனிபஸ் பெரேரா, மீள் குடியேற்றத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய தமிழ் மக்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டதாகவும் அரசுக்கு எதிராக விரலை நீட்டுவோருக்கு இது மறந்து விட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இடம்பெயர்ந்த சிங்கள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது கடைசியில் என்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அதனை தெரிந்து கொண்டே உண்மையை பூதாகரமாக்கி கூறுவது கவலைக்குரியது என்றும் வன்னி கட்டளையிடும் அதிகாரி கூறினார்.
வன்னி மாவட்டத்தில் எவராவது காணாமல் போய் அல்லது இடம் பெயர்ந்து இருந்தால், அது தொடர்பாக தன்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து அறிவிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள தாகவும் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten