தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

மட்டு.வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 47 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறி குடியேற்றம்


அசாத் சாலி தொடர்பில் ரணில் நாடாளுமன்றில் கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 01:44.10 PM GMT ]
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசாத் சாலிக்கு எதிராக சாதாரண சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காது ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஏன் அமுல்படுத்த வேண்டும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது.
அசாத் சாலி பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவே அசாத் சாலி குரல் கொடுத்தார்.
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு பயங்கரவாத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மட்டு.வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 47 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறி குடியேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:01.31 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு கிராமத்தில் 47 சிங்களக் குடும்பங்கள் தற்போது அத்துமீறி குடியேறியுள்ளதாக அப்பகுதி வாழ் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது காணிகளுக்குள் அத்துமீறி குடியமர்ந்துள்ள இவர்கள் தமது நிலங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் தாம் தற்போதைய சமாதான சூழலில் சுதந்திரமாக நடமாடுவதற்கும் தற்போது அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்களால் இன்னல்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் நாம் எமது நிலப் பரப்பில் ஒரு தடி கூட எம்மால் வெட்ட முடியாதுள்ளது. விறகுக்காக வெட்டினாலும் காடு அழிகின்றது என்று கூறி இராணுவத்தினர் எம்மைத் தடுக்கின்றனர்.
அதல் தற்போது அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள் காட்டினை அழித்து குடியேறுகின்றார்கள் அதற்கு அப்பகுதியிலுள்ள இராணுவத்திரன் அனுமதி வழங்கியுள்ளார்கள் என குற்றம் சாட்டும் அப்பகுதி தமிழ் மக்கள், இவ்விடயம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசவிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten