தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

மே 18 குண்டு வெடிக்க கூடாது: மோப்ப நாய்களுடன் இராணுவம் !


வரும் மே 18ம் திகதியை இலங்கை அரசு போர் வெற்றி தினமாக இம்முறையும் கொண்டாவுள்ளது. பல லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இன் நாளை இலங்கை அரசு பெரும் போர் வெற்றி நாளாகக் கொண்டாடுவதை இதுவரை நிறுத்தவில்லை. இதேவேளை இன் நிகழ்ச்சியில் மகிந்தர் உட்பட பல முக்கிய புள்ளிகள் இதில் கலந்துகொள்கிறார்கள். இதனையடுத்து கொழும்பு காலிப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெடிபொருட்களை மொப்பப் பிடிக்கக் கூடிய நாய்கள் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று குண்டுகளை செயலிழக்கச்செய்யும் படைப்பிரிவினரும் அப் பகுதியில் தொடர்ந்து கடமையில் ஈடுபட்டுவருகின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது.

2010ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முதல் இலங்கை அரசு இன் நாளை போர் வெற்றி நாளாக கொண்டாடி வருகிறது. ஆனால் முன் எப்பொழும் இல்லாத அளவு இம் முறை பாதுகாப்புகள் பன்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்று தான் புரியவில்லை என சில அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளார்கள் என அறியப்படுகிறது. போர் வெற்றி நாள் நடைபெறுவதும் போது, அயல் அட்டையில் உள்ள கடைகளையும் இருப்பிடங்களையும் , பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவம் துளைத்து எடுப்பதா பலர் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை மே 18 ஓர் இன அழிப்பு நாள் என்று புலம்பெயர் தமிழர்கள் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். அன்றைய தினம் பெருந்தொகையான தமிழ் மக்கள் கூடி தமது துக்கத்தை வெளியிடுவார்கள். கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten