ஹெலிகொப்டர் பாதுகாப்புடன் லண்டனில் மே 18 நிகழ்வுகள் ஆரம்பம் !
18 May, 2013 by admin
தற்போது லண்டனில் ஹெலிகொப்டர் பாதுகாப்போடு மே 18 நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் மெட்ரோ பொலிடன் பொலிசார் ஹெலிகொப்டரில் வலம் வந்து பாதுகாப்பு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் ஊர்வலம் ஆரம்பமாக இருக்கிறது.
லண்டன் அதிர்ந்தது: 15,000 ஆயிரம் மக்கள் ஊர்வலம் !
18 May, 2013 by admin
லண்டனில் தற்சமயம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் சுமார் 15,000 க்கும் அதிகமான மக்கல் கலந்துகொண்டார்கள். ஊர்வலமாக புறப்பட்ட மக்கல் தற்சமயம் மேடை அருகாமைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் இருந்து கமியூனிஸ் கட்சி தலைவர் த.பாண்டியன் அவர்களும் லண்டன் வந்துள்ளார். பெரும் உணர்ச்சிபூர்வமாக நடக்கும் இன் நிகழ்வுகளின் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.


Geen opmerkingen:
Een reactie posten