தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 mei 2013

முள்ளிவாய்க்காலில் 146,679 உறவுகளின் கதி என்ன? - சீமான் சீற்றம்


யாழில் முன்னாள் போராளிகள் 1000பேர் சுயதொழில் கடனுதவிக்கு விண்ணப்பம்
[ புதன்கிழமை, 15 மே 2013, 03:44.09 PM GMT ]
யாழ்ப்பாணத்திலிருந்து முன்னாள் போராளிகள் 1,000 பேர் சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் 3,500 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன், இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 2500 பேரின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலக புனர்வாழ்வு வேலைத்திட்ட அலுவலகத்திற்கு சுயதொழில் கடனுதவிக்கு விண்ணப்பிக்க வரும் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வெளியேறிய அத்தாட்சி பத்திரம் உட்பட ஆள் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள், வதிவிட அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, தற்போது 500 பேருக்கு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலகு வட்டி வீத அடிப்படையில், வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு மூன்றாம் கட்டமாக அவர்கள் விரும்பிய தொகை கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடனுதவிகள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் மேஜர் ஜகத் குமார தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் 146,679 உறவுகளின் கதி என்ன? - சீமான் சீற்றம்
[ புதன்கிழமை, 15 மே 2013, 04:29.52 PM GMT ]
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவெழுச்சி பேரணியில் லண்டன் வாழ் உறவுகள் அனைவரையும் அலை அலையென திரளுமாறு  நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
146,679 உறவுகளின் கதி என்ன? சிங்களத்தின் தமிழின அழிப்பின் உச்சத்தில் உயிர்கள் அழிப்பு, உடமைகள் பறிப்பு, உயர்வுகள் சிதைப்பு, தாய் நிலம் ஆக்கிரமிப்பு...... முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி எதிர்வரும் மே 18ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
இப்பேரணியில் பகை மிரள அணி திரள்வோம் என சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten