மாங்குளம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி! 15 நாட்களின் பின் சடலம் அடையாளம் காணப்பட்டது!
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 10:02.22 AM GMT ]
கடந்த மாதம் 16ம் திகதி கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திலும் பெற்றோரால் முறையிடப்பட்டிருந்தது.
நுவரொலியா மாவட்டத்தில் ஹக்கலை – திவுரும்பொல பிரதேசத்தில் சீதைக்கு ஆலயம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்திற்கு ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
காணாமல் போனவர் கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துரைச்சாமி - சரோஜா என்பவராவார்.
இவர் சிவில் பாதுகாப்புப் படைப் பணியாளராவர் (சீ.எஸ்.டி). இவர் வட்டக்கச்சிப் பண்ணைக்கு சீ.எஸ்.டி. வேலைக்காகச் சென்ற சமயமே காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி மாங்குளம் பனிக்கன்குளம் என்னும் இடத்திலுள்ள ஆட்களற்ற வீட்டுக் கிணற்றுக்குள்ளிருந்து அம்மிக் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் மேற்படி சடலத்தை தமது மகள் என இனங்காட்டியுள்ளதை அடுத்து விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் மேற்படி சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த யுவதியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்களால் கூறப்படுகின்ற போதிலும் தற்போது உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
விசாரணைகள் முழுமையாக்கப்பட்டதன் பின்னர்தான் உண்மை நிலை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சீதைக்கு ஆலயமா? இராவணனுக்கே முதலில் அமைக்க வேண்டும்!- ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 08:03.10 AM GMT ]
அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
சீதை அம்மனுக்கு ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இராவண மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்பட வேண்டும். இராவண மன்னன் வரலாற்றுடன் எமக்கு முக்கியமான ஒருவர், இராவணனால்தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார்.
இராவணன் சீதை பலவந்தப்படுத்தியிருந்தால் அவர் அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார். பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு ராவண மன்னன் இடையூறு விளைவித்ததில்லை.
எனவே, இராவணன் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரம் கொண்ட இந்திய மத்திய பிரதேஷ் பிராந்தியத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங்க சௌவான், இலங்கையில் சீதை அம்மையாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று அண்மையில் தெரிவித்த கருத்துக்கு அமையவே ராவணா பல அமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் நிச்சயமாக சீதையம்மனுக்கு தேவாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பிரதேஷ் முதலமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் தயானந்த் நிதியத்தின் ஊடாக சீதையம்மன் ஆலயம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, பசுக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கோட்டை போதி மரத்திற்கு அருகாமையில் சத்தியாக்கிரகம் மற்றும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சிங்கள ராவய அமைப்பு தயாராகின்றது.
கால்நடைகளை பலியிடுவதை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அக்மீமன தயாரத்தன தேரரர் தெரிவித்தார்.
பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கண்டி தலதா மாளிகையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டமையை அடுத்தே பசுக்கொலை தொடர்பாக சமூகத்தில் மீண்டும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து இலங்கையில் குடியியல் அமைப்புகள் கால்நடை பலியிடல் மற்றும் பசுக்கொலைக்கு எதிராக குரலெழுப்புவதுடன், அதனை தடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten