[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 02:59.50 AM GMT ]
வடகிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று கிடைக்கும்போது முஸ்லிங்களையும் உள்வாங்கியதாகத்தான் இருக்கும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறுபடாது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
எம்.ஆர்.சீ.நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி அண்மையில் கல்முனையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன் மற்றும் மு.இராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் போது அது முஸ்லிம்களையும் உள்ளடங்கியதாக இருக்கும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களின கருத்தாகவே இருக்கின்றது.
ஆனால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களுடன் இணைந்து தீர்வைப் பெறவேண்டும் என்று உள்ளம் நினைத்தாலும் உதடு சொல்ல மறுக்கிறது அதற்கான காரணம் அரசுடன் இருந்து சலுகைகளைப் பெறுகின்ற போது அவர்கள் உள்ளத்தில் இருப்பவற்றை வெளிக்கொண்டுவரத் தயங்குகின்றனர்.
இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்- முஸ்லிம்கள் இணைந்தே அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்.
வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பூர்வீகமாகவே வாழ்ந்துவந்துள்ளனர். ஆனால் சிங்களவர்கள் அவ்வாறு அல்ல வேறு இடங்களில் இருந்து வந்தேறு குடிகளாகவே உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார்.
பெற்னா தமிழ் விழா 2013ல் “நோ பயர் சோன்” ஆவணப் படக்காட்சி
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 04:42.58 AM GMT ]
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் 26வது தமிழ் விழா எதிர்வரும் யூலை 5ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வில் சனல்- 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு, இயக்குனர் கலம் மக்ரே அவர்களும் நேரடியாகப் பங்கேற்றி உரையாற்றவுள்ளார்.
ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு, அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே நோ பயர் சோன் ஆகும். பல உலகநாடுகளிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலும் திரையிடப்பட்டது.
சிறிலங்காவிற்கு எதிரான பல நாடுகளின் நிலைப்பாட்டுக்கு பெரிதும் துணை நின்ற ஆவணப்படம். போர்க்குற்றங்களுக்காக சிறிலங்கா சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழருக்கு ஓர் நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் மிக உறுதியோடு செயற்படுபவர் இப் படத்தின் இயக்குனரான இங்கிலாந்தைச் சேர்ந்த கலம் மக்ரே அவர்கள்.
ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் புலத்தில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் நிகழ்வுகளில் கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து 3500இற்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten