தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

13ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் உரிய நேரத்தில் அறிவிக்கும்: மேர்வின் சில்வா

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 02:13.19 PM GMT ]
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பா பர்வேஸ் கயானி (Ashfaq Parvez Kayani) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத் தளபதி பர்வேஸ் கயானி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் படைத் தளபதிகளை, கயானி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் உரிய நேரத்தில் அறிவிக்கும்: மேர்வின் சில்வா
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 02:45.37 PM GMT ]
13ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்மானமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமாகும். அதற்கு மேல் எவ்வித தீர்மானமும் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காவிட்டால் எவருக்கும் பதவி இருந்திருக்காது. ஆளும் கட்சியில் இருக்க சந்தர்ப்பம் கிட்டியிருக்காது.
எனவே தீர்மானம் எடுக்கும் உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten