தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அடக்கி வாசிக்கிறது!- கேர்ணல் ஹரிகரன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 02:41.19 PM GMT ]
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகள் இன்று பம்பலப்பிட்டியில் உள்ள தமது அலுவலகத்தில் கூடி இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இடம்பெறவிருந்த போதும் அந்த தெரிவு மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அடக்கி வாசிக்கிறது!- கேர்ணல் ஹரிகரன்
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 11:33.18 PM GMT ]
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் தாமதமடைந்து வருவதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கேர்ணல் ஹரிகரன் தெரிவிக்கிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்த போதே, இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதாக அவர் கூறினார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின் படியான உரிமைகளை வடமாகாணசபை பெற்று விடுவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டதாக கேர்ணல் ஹரிகரன் தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் அப்படியான முயற்சிகளில் இலங்கை ஈடுபடும் போது மீண்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஹரிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
நவம்பரில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக அப்படியான திருத்தங்களை கொண்டுவர இலங்கை முயற்சிக்காது என்றும் அப்படி கொண்டு வந்தால் இந்தியா மாநாட்டுக்கு செல்வது கேள்விக்குறியாகலாம் என்றும் அவர் கூறினார்.
அதனால் இந்தியா தன்மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய சூழ்நிலையை ராஜபக்ச அரசாங்கம் ஏற்படுத்தாது என்றும் கூறிய கேர்ணல் ஹரிகரன், அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அழுத்தங்களை காங்கிரஸ் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Geen opmerkingen:

Een reactie posten