தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர்!

இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர் என பிரபல சிங்களப் பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கு குறித்த நபரே கூடுதலாக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிவினைவாத தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரான பார்பரா லொவிபிலேர் (Barbara Lochbihler) இலங்கைக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி வருகின்றார்.
1960களில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்து ஒளிந்து திரிந்த ரஞ்சித் ஹேன்நாயக்க என்பவரே பார்பராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிராம உத்தியோகத்தர் ஒருவரை படுகொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனல்4 ஊடகத்தில் இலங்கைக்கு எதிரான காணொளிகள் பிரசூரமாவதற்கு ரஞ்சித் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் முன்னாள் ஜே.வி.பி செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten