[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 02:02.15 AM GMT ]
இந்தவகையில் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகை குளம் பகுதிகளில் உள்ள மக்களை கால்நடையாக நேரில் சென்று சந்தித்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன்,கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களான தயாபரன் ,சேதுபதி, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா, மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் சிவமாறன், கட்சியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார் ஆகியோர் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
இச்சந்திப்பின் போது கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் மக்களுடன் 13 ஆவது திருத்தம், அதன் நன்மை, தீமை அதில் உள்ள சரத்துக்களை நீக்கினாலோ அல்லது நீக்காவிட்டாலோ அது எமக்கு எந்த தீர்வையும் தரப் போவதில்லை, வடமாகாண சபை தேர்தல் தமிழருடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றப் போவதில்லை,
இத் தேர்தல் நடைபெறுமா? அல்லது நடைபெறமாட்டதா?, என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கும், நடைபெற்றால் நாம் போட்டியிட வேண்டியதன் அவசியம், இன்றைய காலப்பகுதியில் இருக்கின்ற தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரதும் கடமைப்பாடு என்ன?, நாங்கள் ஒரே அணியில் நின்று செயற்பட வேண்டியதன் அவசியம் என்பது பற்றியும் மக்களுடன் கலந்துரையாடினர்.
உங்களுடைய மனம் தளராத செயற்பாடுகளுக்கு நாங்கள் என்றும் உங்களுடனே உறுதுணையாக இருப்போமென நம்பிக்கையூட்டி வழியனுப்பி வைத்தனர்.
இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கரிசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 01:53.16 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரூட் மீண்டும் பதவியேற்றுக் கொண்டபின் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இலங்கை அகதிகள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினை முக்கிய இடம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்தத் தேர்தலில் வெற்றிவாய்ப்பைக் கொண்டிருப்பதாக கருதப்படும் அவுஸ்திரேலியாவின் பழைமைவாத கட்சி, அகதிகள் விடயத்தில் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு அனுப்புவது இந்தோனேசியாவுடன் பிணக்கை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், இந்த விவகாரம் குறித்து இந்தோனேசியாவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் அவுஸ்திரேலியா வரும் எந்தவொரு அகதியும் திருப்பி அனுப்பப்படப் போவதில்லை என்றும், அவர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்கள் என்பதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமரின் கருத்து அமைந்திருந்தது.
இதற்கிடையே இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 10,000 க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தோனேசியாவிலிருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten