[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 01:24.27 PM GMT ]
கட்சியின் கொள்கையையும், தீர்மானத்தையும், நிலைப்பாட்டையும் மீறி, வடமேல் மாகாண சபையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படுவதை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா ஆகிய இருவரும் வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகள் அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இதன்காரணமாக அவா்கள் இருவரையும் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சி யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார்.
இவர்களுக்கு அதற்கான கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி அனுப்பிவைத்துள்ளார்.
இவர்கள் இருவரிடம் இருந்தும் விளக்கம் கோரும் கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்திலும் இவ் விவகாரம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மற்றொரு வடமேல் மாகாண சபை உறுப்பினரான தஸ்லீம் வாக்களிப்பு இடம்பெற்ற சமயம் நாட்டில் இருக்கவில்லை என தெரியவருகிறது.
ஐதேகவின் புதிய அரசியல் யாப்பு நகல் முஸ்லிம் காங்கிரஸிடம் கையளிப்பு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 12:23.15 PM GMT ]
தமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியை மாற்று அரசாங்கமாக கருதுவதாகவும், முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியல் அமைப்பு நகலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்கு பரிசீலித்து அது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்கும் என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryGRbNdlr3.html
http://www.tamilwin.net/show-RUmryGRbNdlr3.html
Geen opmerkingen:
Een reactie posten