[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 11:43.40 PM GMT ]
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் வந்து குடியேறிய முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த 3 இராணுவச் சிப்பாய்களும் அங்குள்ள முஸ்லிம் யுவதி ஒருவருடன் வெளியில் வைத்துச் சேஷ்டை விட்டுள்ளதுடன், அவருடைய வீட்டைத் தேடி இரவு வந்திருக்கின்றனர்.
இதனை அவதானித்த பிரதேச மக்கள் குறித்த சிப்பாய்கள் மூவரையும் சுற்றிவளைத்திருக்கின்றனர். எனினும் இரு சிப்பாய்கள் பொதுமக்களிடமிருந்து தப்பிச் சென்ற நிலையில் ஒரு சிப்பாய் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் மரத்தில் கட்டிவைக்கப்பட்டார்.
இந்நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தின் ஒரு பகுதியினர் சுற்றிவளைத்து பிரதேச மக்களை துரத்தியடித்த பின்னர் கட்டிவைக்கப்பட்டிருந்த சிப்பாயை கொண்டு சென்றிருக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியே செல்லக் கூடாதெனவும் அவர்கள் பிரதேச மக்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் இலங்கை
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 11:29.21 PM GMT ]
வெளிநாட்டுக் கொள்கை மற்றும் சமாதானத்திற்கான நிதியம் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் நீதித்துறையின் முடக்கம், பொருளாதார வீழ்ச்சி, அரசியல், ஊடக செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தோல்வியடைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 28 ம் இடத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு இலங்கை இந்தப் பட்டியலில் 29ம் இடம் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு இலங்கை இன்னும் மோசமான நிலையை நோக்கி முன்னேறியுள்ளது.
உலகின் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் சோமாலியா தொடர்ச்சியாக முதலிடத்தை வகித்து வருகின்றது.
இலங்கையின் அயல் நாடுகளான பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இலங்கையை விடவும் முன்னணியில் உள்ளன.
தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் பங்களாதேஷ் 29ம் இடத்தையும், நேபாளம் 30ம் இடத்தையும் பெற்றுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten