புத்திஜீவிகளை உருவாக்குவதன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும்: லண்டன் நம்பிக்கை ஒளி நிகழ்வில் செ.சிறீரஞ்சன்
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 02:44.15 PM GMT ]
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூநகரிப் பிரதேச அமைப்பாளரும் ஆசிரியருமான செ.சிறீரஞ்சன் அவர்கள்,
�நவீன உலகின் தொழினுட்பம் மற்றும் அரசியல் வளர்ச்சிப் பாதையிலே தமிழர்களாகிய நாங்கள் இழந்த, இழந்து கொண்டிருக்கின்ற எமது இனத்தினுடைய உரிமை, கலை, கலாசாரம், பொருளாதாரம், எதிர்காலத்தில் எமது இனத்தின் ஸ்திரத்தன்மை என்பவற்றைக் காப்பதற்கு எமது மாணவச் செல்வங்களை அறிவுலகில் பிரவேசிக்க வைப்பதன் மூலமே தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.
மிகவும் மதி நுட்பமாக மிகப் பெரிய திட்டமிடலுடன் ஒரு இனத்தினது பலமான ஆயுதமாகவுள்ள அறிவை, கல்வியை, கலாசாரத்தை, சமூக விழுமியப் பண்புகளில் சிதைவை ஏற்படுத்தவும் அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் நாம் மிகவும் விழிப்பாக இருந்து அவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு எமது தமிழ்த் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஒற்றுமையுடன் ஒரு தலைமையின் கீழ் செயற்பட வேண்டும்� என்று கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினர் பொ.கிருபாகரன் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, லண்டன்�நம்பிக்கை ஒளி� அமைப்பிற்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
அவுஸ்திரேலியா மேலும் 22 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது!
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 12:17.13 PM GMT ]
இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ராணுவத்தை விட கொலைவெறியர்கள் அவுஸ்ரேலிய அரசின் அதிகாரிகளே!!
Geen opmerkingen:
Een reactie posten