[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:10.57 PM GMT ]
இதன்போது இவர்களிடம் சீ.யோகேஸ்வரன் பா.உ. இவ்விடயமாக தெரிவித்ததாவது!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலயங்களிலும் நடைபெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கொள்ளைகள் சார்பாக ஆலய தர்மகர்த்தாக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறையிடுகின்றனர். அதேவேளை பொலிஸார்கள் ஆலயங்களுக்கு வருகை தந்து பார்வையிடுகின்றனர்.
ஆனால் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதானமான எந்த கொள்ளைச் சம்பவம் சார்பாகவும் அதாவது ஆலய விக்கிரம் உடைக்கப்பட்டவை சார்பாகவோ? தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டவை சார்பாகவோ? யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது. அதற்கு பிற்பாடு அதுசார்பாக அவர்கள் விசாரணை நடத்துவதுமில்லை.
கடந்த வருடம் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பெருந்தொகையான நகைகள் இரவு வேளையிலே களவாடப்பட்டது. ஆனால் அதன் முறைப்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உண்டு. ஆனால் இதுவரை எந்தவித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை.
நானும் இவ்விடயமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றேன். ஆனால் இதுசார்பாக எந்த நடவடிக்கையையும் இன்னும் எடுத்ததாக அறியவில்லை.
அத்தோடு இவ்வாலயம் உட்பட மாங்காடு பிள்ளையார் ஆலயத்திலும் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு, தங்க இயந்திரத் தகடுகள்; கொள்ளையிடப்பட்டிருந்தது. அத்தோடு குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. யுத்த காலத்திலே இச்சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய காலத்திலே தான் இவ்வாறான சம்பவம் இடம்பெறுகின்றமை இந்து மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகரைப் பிரதேசத்திலுள்ள புனானை புகையிர நிலைய முன்பாக உள்ள விநாயகர்; ஆலயத்திற்கு அருகாமையில் பிரமாண்டமான விகாரை ஒன்றை பௌத்த பிக்கு உருவாக்கி இருக்கின்றார். அதுதவிர விநாயகர் ஆலயத்தை மறைந்து விகாரையை கட்டியுள்ளனர். அத்தோடு பின்புறமாக 15 வீடுகள் கட்டப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுள்ளது.
ஆனாலும் கடந்த 1990ம் ஆண்டளவில் புணாணை மயிலந்தன்னை கிராமத்தில் இராணுவத்தினரால் 35 பேர் கொல்லப்பட்டும், 13 பேர் கடும் காயமடைந்தும் உள்ளதுடன் இதனால் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக அகதியாக இடம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர். சிலர் தற்போது குடியேறியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு யாழில் 41வது இலக்கிய மாநாடு
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:46.54 PM GMT ]
வன்னியில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் மனிதப் படுகொலையின் குருதி மணமும், அவலக் குரல்களும் தமிழர்களின் மனங்களை விட்டு இன்னும் மறையாத நிலையில், தமிழர்களின் அரசியல், வாழ்வுரிமை, கலை பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளை வைத்தே தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லையென்ற அபிப்பிராயத்தை உருவாக்குதல், தமிழர்களின் பாரம்பரிய பூமியான ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரித்ததுடன், குடிசனப் பரம்பலைச் சிதைக்கும் வகையிலான சிங்களக் குடியேற்றங்கள், பண்பாட்டு வேர்களின் மீது நிகழ்த்தப்படும் நுண் தாக்குதல்கள், மத தலங்களை அழித்தல் என எல்லா அடையாளங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
நமது வரலாற்றுத் துயரம் என்னவெனில், இந்த நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சலுகை அரசியலிற்குப் பலியான சிலரை வைத்தே அரசு நடத்திக் கொண்டிருப்பது தான்.
இதன் தொடர்ச்சியாக – தமிழர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும் அரசு கை வைத்துள்ளது. இப்பொழுது தனது ஆதரவாளர்களைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் 41வது இலக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோல்வியடைந்தபொழுது, அரசிற்கு நன்றியும் பாராட்டுதலும் தெரிவித்த தலித் முன்னணியினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு அப்பாலான ஆட்சி, ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறை என்பவற்றின் மீது போர்த்தப்படும் பல்வேறு திரைகளிலொன்றாகவே இந்தச் சந்திப்பையும் நோக்க வேண்டியுள்ளது.
ஏனெனில் யார் யாரெல்லாம் இலக்கிய சந்திப்பின் ஏற்பாட்டாளர்களாகவும் அமைப்பாளர்களாகவும் உள்ளார்கள் என்பதிலிருந்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. வரும் தேர்தலில் அரச தரப்பு வேட்பாளராகப் போட்டியிடும் தமிழழகன், ஈபிடீபி யின் ஆலோசகர் ரங்கன் தேவராஜன், ஈபிடீபி யின் கிளிநொச்சி இணைப்பாளர் கருணாகரன், ஈபிடீபியின் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியரும் இலங்கை வானொலியில் இதய சங்கமம் நிகழ்ச்சி நடத்தியவரும் பின்னர் தமிழர் தேசியப் போராட்டத்தை அழிப்பதற்கு ஈபிடீபியின் இதய வீணை என்ற நிகழ்ச்சி நடத்தியவரும் இந்திய இராணுவக் காலத்தில் ஈ.பி.ஆர் எல்.எவ்.ஆக அசோகா ஹோட்டலில் இருந்து தமிழ் தேசியத்தை அழித்தவரும் டக்ளசின் தற்போதைய ஆலோசகருமான சிதம்பரப்பிள்ளை சிவகுமார் போன்றவர்கள் தான் இதனை முன்னின்று நடத்துகிறார்கள்.
இதனை உறுதி செய்யும் விதமாகவே நடைபெற்ற சம்பவங்களும் அமைந்துள்ளன. சந்திப்பின் உள்ளடக்கம், இலங்கை அரசை ஆதரிப்பதாகும் என்ற உண்மையினை வெளிப்படுத்தியபடி, ஒரு தொகுதி படைப்பாளிகள் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தமிழ் தேசிய கருத்துக்களைப் பேசுவதற்கு அரச ஆதரவாளர்கள் இடமளிக்கவில்லையென்பதும் அவர்களின் குற்றச் சாட்டுகளிலொன்று. படைப்பாளிகள் தமது அனுபவங்களை எழுதுவதும் பேசுவதும் இலங்கையின் நிலவரங்களைப் பொறுத்தது.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட எழுத்தாளர் விழாக்கள் எல்லாமே வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். இலங்கையர்களினால் நடத்தப்பட்டவையல்ல. இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு வெளியிலிருந்து வருவதை அடியோடு நிராகரிக்கும் இலங்கை அரசு தமிழர்கள் இயல்பாக வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கான விழாக்களை மட்டும் இறக்குமதி செய்வது வேடிக்கையானது.
யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கலை இலக்கிய விழாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆழுமைகளின் பங்களிப்பினைக் கோராததன் மூலமும் உள் நோக்கமுடைய சந்திப்பென்பதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசின் திரை மறைவிலான இந்த முயற்சிகளை முறியடிப்பது ஒவ்வொரு படைப்பாளிகளினதும் வரலாற்றுக் கடமை. போராட்டமென்பது களங்களிற்குச் செல்வது மட்டுமல்ல. சில இடங்களிற்குச் செல்லாமலிருப்பதும் தான். ஆகவே இந்த நிகழ்வைப் புறக்கணிக்குமாறு தமிழ் பேசும் படைப்பாளிகளைக் கேட்டுக் கொள்கிறோம் என யாழ்-கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய இலக்கியப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten