தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதால் பாதிப்புக்கள் அதிகம்: தயான் ஜயலதிலக்க- 13ம் திருத்தச் சட்டம் மாற்றம் செய்யக் கூடாது: ஐ.தே.க !

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதனை விடவும் அமுல்படுத்தாமல் இருப்பதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் அதிகம் என முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் இடதுசாரி தமிழ் கோட்பாடுகளை பின்பற்றி வரும் சகல தப்பினரும் 13ம் திருத்தச் சட்டம் போதுமானதல்ல என்ற நிலைபாட்டிலேயே இருந்தனர்.
13ம் திருத்தச் சட்டத்தை சிலர் ஈழத்திற்கான வழியாகவும், நாட்டை பிளவுபடுத்தக் கூடிய ஒன்றாகவும் பிரசாரம் செய்கின்றனர்.அவ்வாறு என்றால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போர் செய்தார்?
தமிழீழத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதனை இறந்த பிரபாகரனுக்கு பாடம் புகட்ட சில தற்போதைய அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல தரப்பினரும் 13ம் திருத்தச் சட்டம் போதாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இதனை அமுல்படுத்துவதனை விடவும் அமுல்படுத்தாமல் இருப்பதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
13ம் திருத்தச் சட்டம் மாற்றம் செய்யக் கூடாது: ஐ.தே.க
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
13ம் திருத்தச் சட்டம் அதேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இத்திருத்தச் சட்டம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவானது. இது ஓர் சர்வதேச ஒப்பந்தமாகும்.எனவே இதனை திருத்தி அமைப்பது பொருத்தமாகாது. குறிப்பாக விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கு தேவையான வகையில் இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது.
13ம் திருத்தச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும் சட்டமாக கருதப்பட முடியாது. இத்திருத்தச் சட்டம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பி ஆளும் கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten