தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

மட். புத்தர்சிலை நிறுவும் முயற்சி! இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய திணைக்களங்களுக்கு அரசாங்கம் கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - பிரபா கணேசன் சந்திப்பு
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 04:48.22 PM GMT ]
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக ஆதரவை திரட்டும் பணிகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மற்றும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து வருகிறது.
இதன் ஒருக்கட்டமாக இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம் ஏ சுமந்திரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனை சந்தித்து உரையாடினர்.
இதன்போது 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மாற்றங்களை கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு பிரபா கணேசன் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இதற்காக அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளவும் தயார் என்று குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பான வாக்களிப்பு நடத்தப்படுமானால் அதன்போது எதிர்த்து வாக்களிக்கப் போவதாகவும் பிரபா கணேசன் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட். புத்தர்சிலை நிறுவும் முயற்சி! இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய திணைக்களங்களுக்கு அரசாங்கம் கடிதம்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 11:28.49 PM GMT ]
மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் மீண்டும் புத்தர் சிலையினை நிறுவும் முயற்சி இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மதவிவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு ஏதுவான நிலை தொடர்பில் ஆராயுமாறு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கலாசார திணைக்களங்களுக்கு இலங்கை மத விவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் அதேவேளையில், மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரரின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒரு வார காலத்துக்குள் அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மத விவகார, புத்தசாசன அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் சில நாட்களில் மூன்று திணைக்களங்களையும் சேர்ந்த தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து இது தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆலயங்கள் உடைப்பின் பின்னணியில் மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர் உள்ளதாக அண்மைக்காலமாக தகவல்கள் தெரிவித்த நிலையில் இந்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten