[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 10:03.17 AM GMT ]
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 27ம் திகதி தன்சானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின்போது,தன்சானியாவில் இடம்பெற்ற மாநாட்டிற்காக சென்ற மலேசிய பிரதமர் நஜிப் ரஷாக்கை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போதே இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா ஒத்துழைப்பை வழங்குவதாக குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தன்சானியாவுக்கான விஜயத்திலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிசெல்ஸுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று சிசெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி ஜேம்ஸ் மைக்கல் விமான நிலையத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 10:35.40 AM GMT ]
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டுபேசும் போதே இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம் பாதுகாக்கப்படும். அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவம் என அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten