[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 08:45.19 AM GMT ]
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் பல பகுதிகளில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகள் நடைபெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதனால் இவற்றைத் தடுப்பதற்கும் யாழ்ப்பாண பாரம்பரிய கலாசாரத்தைக் கட்டிக் காப்பதற்காக இந்தப் பிரிவு இயங்கவுள்ளது.
தனியார் விடுதிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்களை அனுமதித்தல்,
அனுமதியில்லாமல் இயங்கும் விடுதிகளை மூடுதல்,
அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் மதுக்கடைகளை மூடுதல்,
பாடசாலைகளுக்கு அருகில் நின்று பாடசாலை மாணவர்களுக்கு சேட்டை விடுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
யாழின் கலாசாரத்திற்கு பங்கம் விளைவிப்பவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
13ஐ காப்பாற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரசும் முன்வர வேண்டும்: பிரபா கணேசன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:03.00 AM GMT ]
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அவர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்களேயாயின், அரசாங்கத்திற்கு ஒரு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரச பங்காளி கட்சிகளான வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஹெல உறுமய போன்றவை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியுமாயின், அரசுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு 13ல் கை வைக்கக் வேண்டாம் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
13ல் திருத்தம் கொண்டு வராமல் வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். அதே போல் 13ல் கை வைத்தால் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
மாகாணசபை முறைமையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என இடது சாரி அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 13ஐ ஒழிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். இதையே மேலும் 2 அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். இவர்கள் 13வது திருத்த சட்டத்தில் எதனையும் அப்புறப்படுத்துவதற்கு இடங்கொடுக்கக்கூடாது.
ஏதாவது ஒரு சரத்தினை குறிப்பாக மாகாணங்கள் இணையும் அதிகாரத்தை இல்லாதொழிக்க ஆதரவு வழங்கினால் கூட அது இனவாதிகளுக்கு சாதகமாகிவிடும். அதன்பிறகு 13வது திருத்த சட்டத்தில் ஏனையவற்றையும் இல்லாதொழிப்பது சுலபமாகிவிடும்.
ஆகவே 13வது திருத்த சட்டத்தில் எந்த ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தாலும் கூட அதனை முற்போக்குக் கொண்ட அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. என்னுடன் இணைந்து இன்னும் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் திருத்தம் மேற்கொண்டால் எதிர்த்து வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரசும் இது சம்பந்தமான எமது நிலைப்பாட்டை எடுக்குமாயின் அரசாங்கத்திற்கு ஒரு போதும் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten