தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

அவுஸ். கடலில் மூழ்கிய படகு குறித்து தகவல்களை அறிய அதிகாரிகள் அசமந்தம்!- மக்கள் குற்றச்சாட்டு


புலிகள் பயன்படுத்திய சொத்துக்களை இராணுவம் கையகப்படுத்தவுள்ளது குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? மக்கள் கேள்வி
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 11:44.55 PM GMT ]
வடக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நிலங்கள், சொத்துக்களை இராணுவம் கையகப்படுத்தவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விடயம் குறித்து தமிழ் அரசியல் வாதிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மௌனம் சாதிப்பது எதற்காக என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இவ்வாறு வடக்கில் யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 600ற்கும் மேற்பட்ட புலிகளுடைய சொத்து உறுதிப்படுத்தப்பட்டு அவற்றை இராணுவம் கையகப்படுத்தவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இராணுவத்தினரால் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மாவீரர் துயிலுமில்லங்கள் மட்டுமில்லாமல், வீடுகள், பெறுமதியான காணிகள், கடைத்தொகுதிகள் போன்றனவும் உள்ளடங்குகின்றன. அவற்றில் சுமார் 95 வீதத்திற்கும் மேற்பட்டவை மக்களுடைய சொத்துக்கள்.
அந்தச் சொத்துக்களுக்குச் சொந்தமானவர்கள் வெளிநாடுகளிலும், குறிப்பாக இந்தியாவிலும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவற்றுக்கான முழுமையான ஆவணங்களும் அவர்களிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர், அமைதியாக இருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள மக்கள். இந்த விடயம் குறித்து மக்கள் சார்பில் பூரணமான எதிர்ப்பினை தெரிவித்து. மக்களுடைய சொத்துக்கள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுள்ளனர்.

அவுஸ். கடலில் மூழ்கிய படகு குறித்து தகவல்களை அறிய அதிகாரிகள் அசமந்தம்!- மக்கள் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 11:58.03 PM GMT ]
அவுஸ்திரேலியா அருகில் கடலில் மூழ்கிய கப்பலில் பயணித்தவர்கள் முல்லைத்தீவு மக்களா? இல்லையெனில் அவுஸ்திரேலியா சென்ற எங்கள் உறவினர்களின் தொடர்புகளை பெற்றுத் தாருங்கள் எனக் கேட்கும் மக்கள் அரச அதிகாரிகளாலும், பொலிஸாராலும் அச்சுறுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
கடந்த 8ம் திகதி முல்லைத்தீவின் பல பகுதிகளிலிருந்தும், வடக்கின் சில மாவட்டங்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட மக்கள் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் டெனி மற்றும் கடற்படையினரால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுடனான தொடர்புகள் எவையும் இன்றுவரை அவர்களது உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் குறித்த படகு அவுஸ்திரேலியா அருகே மூழ்கிவிட்ட நிலையில் அதில் பயணித்த முல்லைத்தீவு- கள்ளப்பாட்டைச் சேர்ந்த பெண்னொருவரின் சடலம் அவுஸ்திரேலிய கரையில் ஒதுங்கியதாகவும், அந்தத் தகவல்கள் உறவினர்களுக்கு கிடைத்து விட்டதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்திருக்கின்றது.
குறித்த செய்தி எமது தளத்திலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அந்தப் படகில் பயணித்த ஏனையவர்களுடைய உறவினர்கள் தங்கள் உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தாருங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்த இடைத்தரகரிடமும், அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் கேட்டு வருகின்றனர்.
எனினும் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை எனவும், அது குறித்துக் கேட்க வேண்டாம் தமக்கு எதுவும் தெரியாதெனவும் கூறும் அவர்கள், அனுப்பி வைக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மறுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten