நாடாளுமன்றத் தெரிவுக்குழு காலத்தை விரயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது- நாட்டை பிளவுபடுத்த வேண்டிய அவசியமில்லை: பிரதமர்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 02:56.11 PM GMT ]
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பட்ட நிலைப்பாடுகள் வெளிப்பட்டுள்ளன.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட அரசாங்கத்திற்கு முதுகெலும்பு கிடையாது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு பல தடவைகள் வாக்குறுதி அளித்துள்ளது.
போரின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என பலர் எதிர்பார்த்தனர் எனினும், போர் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த வேண்டிய அவசியமில்லை- பிரதமர்
நாட்டை பிளவுபடுத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கை விடவும் தெற்கில் அதிகளவான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தனிநாட்டுக் கோரிக்கைக்கு புலம்பெயர்ந்து வாழும் சிலரும், சில சிறுபான்மை கட்சிகள் மட்டுமே ஆதரவளிக்கின்றனர்.
இந்தக் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அனுமதியளிக்கப்பட மாட்டாது.
இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முதன்மை நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஆயரை புதிய பிரபாகரன் என சித்தரிக்கும் பொதுபலசேனா தேரர்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 03:29.54 PM GMT ]
தமிழர் என்பதால் மன்னார் ஆயர் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகின்றார்.
எனவே இவருக்கு எதிராக குரல் கொடுக்க கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள ஆயர்கள் அனைவரும் முன்வரவேண்டும்.
தேசப்பற்று மிக்க கத்தோலிக்கத் திருச்சபையின் சிங்கள ஆயர்கள் அனைவரும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த தீர்க்கமான கட்டத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம், மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten