தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 juni 2013

நவனீதம்பிள்ளையை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லத் திட்டம்

யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 01:03.41 AM GMT ]
யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூன்று சிறுமிகளில் ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலை பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் குறித்த சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
வீட்டு ஏஜமானி குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார். தந்தையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறுமியை எஜமானி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தடுப்புகாவல் உத்தரவிற்கு அமைய சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து 21 மற்றும் 22 வயது பெண்களுடன் குறித்த சிறுமி மே மாதம் 24 ம் திகதி தப்பியோடியுள்ளார். அவர்கள் மூவரும் கொழும்பை நோக்கி வந்துகொண்டிருந்த போது அதிலொரு யுவதி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.  அவரின் கோரிக்கைக்கு அமைய மூவரும் பிலியந்தலைக்கு சென்று ஹோட்டலில் தங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுமியை மட்டும் அங்கிருந்த இளைஞரிடம் ஒப்படைத்த இரண்டு யுவதிகளும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை சில நாட்கள் ஹோட்டலில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன், அதற்கு பின்னர் களனியிலுள்ள பெண்ணொருவரிடம் குறித்த சிறுமியை வீட்டுவேலைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேநபர் பிலியந்தலையை சேர்ந்த மேசன் என்று தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மற்றைய இரண்டு யுவதிகள் தொடர்பில் இதுவரையிலும் தகவல் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தார்.

நவனீதம்பிள்ளையை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லத் திட்டம்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 02:18.25 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே இவ்வாறு திட்டமிட்டுள்ளனர்.
தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு சொல்லும் நோக்கில் இவ்வாறு நவனீதம்பிள்ளையை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்மதித் தொலைபேசிகளின் ஊடாக புலிச் சந்தேக நபர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். அண்மையில மகசீன் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 18 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
இதேவேளை, நவனீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten