[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 02:18.38 AM GMT ]
இலங்கையில் டொலருக்கு எதிராக ரூபாயின் தளம்பல் நிலை வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 131 ரூபாவாக இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 130 ஆக இருந்தது.
கடந்த வருடம் ஜூலையில் 135 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி, பின்னர் கடந்த வாரம் வரை 126 ரூபாவாக இருந்து வந்தது.
இந்தநிலையில் மத்திய வங்கியின் டொலருக்கான வெளிவருகை ஒதுக்கத்தின் அடிப்படையில் ரூபாயின் பெறுமதியில் எதிர்வரும் நாட்களிலும் தளம்பல் காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
13வது அரசியல் அமைப்பை அரசாங்கம் மாற்றிக்காட்டட்டும்: ஐ.தே.க சவால்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 02:28.07 AM GMT ]
13வது அரசியல் அமைப்பில் மாற்றம் செய்வதன் மூலம் நாட்டில் இயல்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் அரசாங்கம், தேவையற்ற முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten