தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

ஆளும் கட்சியுடன் இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லலாம்!- ஜனாதிபதி - இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தமிழீழ அணி
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 01:50.11 AM GMT ]
தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது.
சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன.
இவ்வாறான சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடாக தமிழீழத்தின் தனித்துவத்தைப் பேணுவதுடன் அவர்களின் திறமையினை ஊக்குவிக்கும் பொருட்டும் உலகளாவிய தமிழ் இளையோர் அவை (T-League) 2012ம் ஆண்டில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தை உருவாக்கியது.
தமிழீழ உதைபந்தாட்டக் கழகமானது உலகெங்கும் பரந்து வாழும் ஆர்வமுள்ள தமிழ் இளையோர்களால் தமிழீழத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இது, சுவிஸ்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராட்சியம், நோர்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் வாழும் எமது வீரர்களில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீன் நாகேந்திரம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
"இனப்படுகொலைக்கு தமிழீழத்தில் முகங்கொடுத்துவரும் எமது சகோதரர்களின் நிலைபற்றி அறிவோம். அவர்களும் தமிழீழத்தின் சார்பில் இப்போட்டிகளில் பங்குபற்றும் ஒரு நாள் நிச்சயம் உருவாகும். அதுவே எமது எதிர்பார்ப்பு" எனக் கூறினார்.


ஆளும் கட்சியுடன் இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லலாம்!- ஜனாதிபதி - இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 02:28.02 AM GMT ]
ஆளும கட்சியுடன் இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்குள் குழுக்களாக பிரிவடைந்து செயற்பட அனுமதியளிக்கப்பட மாட்டாது.
ஆளும கட்சியில் இருக்க முடியாவிட்டால் குழுக்களாக அணி திரளாது விலகிச் செல்ல முடியும்.
குழுக்களாக பிளவடைந்த முடிந்த சிலரை நான் ஏற்கனவே அனுப்பியிருக்கின்றேன்.
எந்தவொரு நபருக்கும் தனிப்பட்ட ரீதியான கருத்துக்களை வெளியிட முடியும், அதில் தவறில்லை. எனினும் அவை ஆளும் கட்சியின் நிலைப்பாடாக அமையாது.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டையே அனைவரும் வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்டு வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை
13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சி இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு, 13 ஆம் திருத்தம் குறித்து கலந்துரையாட அலரி மாளிகையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்போது, 13 வது திருத்தம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எட்டப்படும் என்றும், அதுவரை அரசியல் தரப்பினருக்கு இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தடைசெய்வதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன மற்றும் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட இடதுசாரி அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் அண்மையில் செய்தியாளர் சந்திப்புகள் இடம்பெற்றன.
அதன்போது, 13 வது அரசியல் திருத்தத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அமைச்சர்களான ராஜித்த சேனாரட்ன மற்றும் ஜெனினோல்ட் ஆகியோர் பலவித கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் வரை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கூடாது என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அவர்கள் இணங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten