தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

பெண்ணும் ஆணும் தனியாக அறையில் இருப்பதை விபச்சாரமாக எடுக்க முடியாது! யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி - எதிராக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி

கோத்தபாயவின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு!- வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்குத் தொடர்பு?
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 08:37.06 AM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கைத்தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கடும் அதிர்ச்சியுற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச, தனது கைத்தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
தனது கைத்தொலைபேசியை இரகசியமாக ஒட்டுக் கேட்பதன் மூலமாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கையொன்றில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் செயற்படும் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்கு நாடொன்றின் பிரஸ்தாப தூதரகத்திற்குள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்கான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு செயலாளர் உட்பட அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படும் அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளிவந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் குறித்த வெளிநாட்டுத் தூதரகம் தங்கள் நாட்டின் பலம் வாய்ந்த புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் அரசாங்கமும், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமும் தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண்ணும் ஆணும் தனியாக அறையில் இருப்பதை விபச்சாரமாக எடுக்க முடியாது! யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி - எதிராக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 09:24.30 AM GMT ]
யாழில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும்  தனியாக அறையில் இருப்பதை விபச்சாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகளை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர் என அந்த பொண்கள் அமைப்புக்கள் யாழ்.பொலிஸாரின் செயற்பாடுகள் பற்றி விமர்சித்துள்ளனர்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பதிவு செய்யப்படாத விடுதிகள் மற்றும் சமூக சீர்கேடான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் போதே இதனை சுட்டிக்காட்டினர்.
அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும், ஆணும் விடுதிகளில் தங்குவது தடையில்லை என்று பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுத்துரைத்த பெண்கள் அமைப்புக்கள், யாழ். மாவட்டத்தில 18 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்காதது விபசாரத்தை ஊக்கப்படுத்தும் ஆலோசனையாகவே இது அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த யாழ் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி,
யாழ். மாவட்டத்தில் 40 க்கு மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட இருவர் தங்கள் சுயவிருப்பின் பேரில் தங்கியிருந்தால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களின் சுயமரியாதையினையும் கருத்தில் எடுக்க வேண்டும்.
அத்துடன் யாழில் நடைபெறுவதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது. விபச்சாரத்திற்கும் இங்கு நடைபெறும் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு ஒரு ஜோடியினர் யாழ் பிரதேச செயலாளரினால் பிடிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக விடுதி முகாமையாளரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், பிரதேச செயலாளரின் நடவடிக்கை தவறானது என சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது குறித்த விடுதி முறையற்ற ரீதியில் நடத்தப்படுவதாக யாழ் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானசாலைக்கான வரி அனுமதியின்றி விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அவ்விடயம் தொடர்பாக ஆராயச் சென்ற வேளையிலேயே குறித்த யுவதி இளைஞருடன் தனியாக இருந்ததாகவும், யுவதியிடம் அடையாள அட்டை இல்லாத நிலையில் இருந்தார் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த யுவதியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தாகவும், பெண்கள் அமைப்பின் படி, தான் செய்தது சரியென்றும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா, தன்னைப் பொறுத்தவரையில் 18 வயது பெண்ணும். 21 வயது ஆணும் தனியாக அறையில் இருப்பது விபச்சாரமல்ல, காசுக்காக பெண்ணொருவர் பல இளைஞர்களுடன் இருப்பது தான் விபச்சாரமாகும் என குறிப்பிட்டார்.
இவ்வாறு யாழ் நகரில் விபசாரம் நடக்கின்றது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அது உறுதிப்படுத்தப்படுமாயின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
வடக்கில் வேறு கலாசாரம், தெற்கில் வேறு கலாசாரம் அல்ல. ஆனால் வடக்கிலும் தெற்கிலும் சட்டம் ஒன்று தான், நாங்கள் சட்டத்தின் படி பார்க்கின்றோம் என்றும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாநர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மருதங்கேணி பிரதேச செயலாளர் திருலிங்கநாதன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஜெயசீலன் மற்றும் பிரதேச வாழ் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten