தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

வெடிகுண்டு ரிமோட் விமானம் சிக்கியது !



இன்று காலை ஜெர்மன் போலீஸின் சிறப்பு பிரிவு சில இடங்களில் அதிரடி ரெயிட் ஒன்றை நடத்தி, ஒருவரை கைது செய்ததுடன், சில பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளது. எடுத்துச் சென்ற பொருட்களில் ஒன்று, ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படக்கூடிய விமானம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் வெடிகுண்டை பொருத்தி, உயரமான பில்டிங் ஒன்றை தகர்க்கும் தீவிரவாத இயக்கத்தின் திட்டம் பற்றிய உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்தே, இந்த ரெயிடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியில் இருந்து சென்று பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி பெற்ற சிலர், ‘ஒரு திட்டத்துடன்’ ஜெர்மனி திரும்பியிருப்பதாக ஜெர்மன் உளவுத்துறை தெரிந்து கொண்டதாம். அதையடுத்து பாகிஸ்தானுக்கு அசாதாரண விதத்தில் சென்று திரும்பிய (இந்த ஆளுக்கு பாகிஸ்தானில் என்ன சோலி ?) சிலரை கண்காணித்ததில், இந்த சதித்திட்டம் தெரிய வந்ததாம். இன்று காலை ஜெர்மன் போலீஸின் சிறப்பு பிரிவான ஜி9ஜி (G9G) தெற்கு ஜெர்மன் நகரங்களான ஸ்டர்கார்ட், மியூனிக், டச்சாவில் உள்ள சில வீடுகளில் ரெயிட் செய்தது. அத்துடன், ஜெர்மனி சக்ஸோனி மாநிலத்தில் உள்ள இன்டர்நெட் வழங்கும் நிறுவனத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார், இவர் ஜெர்மனியில் இருந்து பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்று திரும்பியவர் என்று சொல்லப்படுகிறது. (கைது செய்யப்பட்டது குறைந்தது இரண்டுபேர், அதைவிட அதிகமாககூட இருக்கலாம் என்கிறது மற்றொரு தகவல்) அவரது வீட்டில் இருந்து போலீஸ் ஜி9ஜி பிரிவினர் சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர் இதில் (சில சிறிய விமானங்கள் சிக்கியதாக ஜெர்மன் மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது)

ஃபெல்பாச் நகரில் உள்ள அமைதியான குடியிருப்பு பகுதியில் போலீஸ் ரெயிட் நடத்தப்பட்டதுடன் மியூனிக் நகரில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் நடந்த ரெயிடின்போது சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த மியூனிக் அப்பார்ட்மென்ட் எங்கே உள்ளது தெரியுமா ? 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மியூனிக் நகரில் நடந்தபோது ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் 11 பேர் கொல்லப்பட்டார்களே, அதே ஒலிம்பிக் கிராமம் இருந்த இடத்தில் இப்போது குடியிருப்புகள் உள்ளன. அங்குதான் ரெயிட் நடந்த அப்பார்ட்மென்ட்டும் உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten